வகை: கருத்து

ஆங்கில விளம்பரங்களையும் ஆக்கிரமிக்கும் இந்தி ; நுட்பமான தளத்தில் நகரும் மொழி அரசியல்….

சுபகுணராஜன் அரசு விளம்பரங்களில் 50%மட்டுமில்லை ஆங்கில விளம்பரங்களில் பாதியையும் இந்தி பிடித்து விட்டது. மொழி அரசியல் நுட்பமான தளங்களை நோக்கி நகர்கிறது. இன்னும் இந்தி படிக்க விடாமல் எங்களைக் கெடுத்து விட்டார்கள் என்பதான ‘பொன்னார்’ வகை புலம்பல்கள் அலுப்பூட்டுகிறது.தமிழ்நாட்டில் இந்தி படிக்க முடியாத கட்டாயச் […]

முற்போக்கு சுய திருப்தி

ஸ்டாலின் ராஜாங்கம் எந்த தேசியவாதமாக இருந்தாலும் அதற்கு தேவை ஒரு பக்கம் வெறுப்பும் மறுபக்கம் கண்ணை மூடிய விசுவாசமும் தான். கர்நாடக அரசியல்வாதிகளுக்கு சத்யராஜீன் பேச்சு எதிர்மறையானதென்றால் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு நேர்மறையானது. இரண்டையும் அந்தந்த தரப்பு நியாயம் என்றே நம்புகிறது. மற்றபடி நம்மூர் முற்போக்குவாதிகளுக்கு […]

“தி இந்து” நாளிதழின் ஊழியர் சங்கத் தலைவரானார் கனிமொழி; அசைவம் சாப்பிட அனுமதி கிடைக்குமா ?

திருமுருகன் காந்தி சந்தோசம்ம்ம்ம்… ’மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு கம்பேனி-தி இந்து’வின் ’பணியாளர் மற்றும் தேசிய பத்திரிக்கை ஊழியர் சங்கத்திற்கு’, ‘அக்மார்க்’ திராவிட கட்சி என்று சொல்லிக்கொள்ளும் திமுகவிலிருந்து  தலைவர் வந்திருக்கார்… தொழிற்சங்கத்திற்கு ‘ தி இந்துவின்’ அரசியல் பார்வை குறித்து முடிவெடுக்கும் அதிகாரப்பகிர்வு இருக்குமா? ( […]

ஆடி கார் வைத்திருக்கும் விவசாயி அம்மணமாய் ஓடுவதும் அசிங்கம்தானே?

சரவணன் சந்திரன் கடைசியில் பாரதத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டோம். இது உண்மையிலேயே தேசிய அவமானம். அங்கே போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அய்யாக்கண்ணு ஆடிக் கார் வைத்திருக்கிறாரா? என்றெல்லாம் பேசிப் புரிய வைக்க வேண்டிய தேவையில் இருப்பது எவ்வளவு அவமானம் தெரியுமா? […]

ஃபாரூக் கொலை இந்துத்துவாவுக்கு ஆதரவாகத்தான்!

ராஜசங்கீதன் ஜான் கவண் பட விமர்சனங்களிலும் நீயா நானா வரதட்சணை நிகழ்ச்சி பகுதி 2 பற்றிய பதிவுகளிலும் மூழ்கி முத்தெடுக்க போகிற முகநூல் தமிழர் வாழ் பிரதேசத்தில், கடந்து போன ஒரு முக்கியமான பிரச்சினையை திரும்ப கொண்டு வர விழைகிறேன். ‍‍ கோயம்புத்தூரில் நடந்த ஃபாரூக் […]

ரஜினியின் வருகைக்காக போராடும் மக்களை இழிவுபடுத்தலாமா?

த. கலையரசன் யாழ்ப்பாண‌த்தில் ந‌ட‌ந்த‌ ர‌ஜ‌னி ஆத‌ர‌வு போராட்ட‌ம் தொட‌ர்பாக‌: ஜ‌ல்லிக்க‌ட்டு மாடுக‌ளுக்காக‌ போராடிய‌வ‌ர்க‌ள், ர‌ஜ‌னிகாந்த் என்ற‌ ந‌டிக‌னுக்கான‌ போராட்ட‌ம் “நியாய‌ம‌ற்ற‌து” என‌க் கூறுகிறார்க‌ள். ஈய‌த்தை பார்த்து பித்த‌ளை இளித்த‌தாம் என்றொரு ப‌ழ‌மொழி உண்டு. எது நியாயம்? எது நியாயமற்றது? அதை தீர்மானிப்பது யார்? […]

நூறு நாள் வேலைத் திட்டம்: சில உண்மைகளை பேசித்தான் ஆக வேண்டும்!

சரவணன் சந்திரன் இந்த நூறு நாள் கட்டாய வேலைத் திட்டம் குறித்து பேசுவதெல்லாம் கத்தி மேல் நடப்பதற்குச் சமம். ஆனாலும் இந்த வறட்சி, விவசாயம் என்றெல்லாம் பேசும் போது அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி புரியும் அம்மாவின் […]

ஐரோம் சர்மிளாவின் தோல்விக்காக வருத்தப்பட வேண்டியதில்லை; ஏன்?

ஜி. கார்ல் மார்க்ஸ் நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் பெரும் வெற்றியை ஈட்டியதன் மூலம் மற்றைய மாநிலங்களில் அது தவறவிட்ட செய்தியை இல்லாமல் ஆக்கியிருக்கிறது பிஜேபி. இந்த வெற்றி குறித்து தெரிவிக்கப்படுவது அச்சம் என்றால், மணிப்பூரின் ‘ஐரோம் ஷர்மிளா’ வெறும் […]

இளையராஜா எஸ்.பி.பி விவகாரம்: உரிமையை நிலை நாட்ட முயல்வது ‘பேராசையா’?

வினோ ஜாசன் இளையராஜா – எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை. இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த […]

“இஸ்லாமிய அன்பர்களே, உண்மையில் இசை பாவச் செயலா?”

அ. குமரேசன் நஹீத் அஃப்ரின் -அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி. ஒரு தொலைக்காட்சியின் பாட்டுப்போட்டியில் இனிமையாகப் பாடி நேயர்களின் செவிகளையும் மனங்க்ளையும் வென்றவர். இறுதிப்போட்டியில் வெல்ல முடியாமல் போனாலும் நிறையப் பாராட்டுகளை, குறிப்பாகக் குழந்தைகளின் வரவேற்பைப் பெற்றவர். வெற்றி வாய்ப்பை இழந்ததை […]

கம்யூனிஸ்டுகளை சந்தேகப்படலாமா?

மாதவராஜ் சி.பி.எம் கட்சியின் தலைமை உயர்ஜாதி பிராமணர்கள் கையில் இருக்கிறது, அதுதான் சிபிஎம் கட்சியின் பின்னடைவுக்கும், தவறான நிலைபாடுகளுக்கும் காரணம் என்று இங்கு பேசப்படுகிறது. மட்டமான கிண்டலும், நக்கலுமாக இந்தக் கருத்துகள் சொல்லப்பட்ட போதிலும், கம்யூனிஸ இயக்கத்தை எதாவது சொல்லி களங்கப்படுத்த வேண்டும் என்ற […]

உ. பி. ஆட்சி மாற்றம்; அகிலேஷ், மாயாவதி செய்யத் தவறியவை

உத்திரபிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் 322 இடங்களைப் பிடித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கிறது பாரதிய ஜனதா கட்சி. இந்த மாபெரும் வெற்றிக்கு என்ன காரணம்? எழுத்தாளர் அன்புசெல்வம் தரும் சில காரணங்கள்… உ.பி -யில் பாஜக வெற்றி பெற்றது புதிய விசயமல்ல. […]

பாஜகவின் வெற்றிக்குக் காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளா?!

மாதவராஜ் பாரதீய ஜனதா அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு பெற்றதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் நிலைபாடுகள்தான் காரணம் என்னும் கருத்து இந்த நேரத்தில் முன்வைக்கப்படுகிறது. சென்ற பாராளுமன்றத் தேர்தலில், ‘பாஜக, காங்கிரஸ் இரண்டையும் நிராகரிப்போம்’ என்று சி.பி.எம் எடுத்த அரசியல் நிலைபாடு விமர்சிக்கப்படுகிறது. காங்கிரஸை ஆதரித்து […]

நாய்க்கு கட்டும்போது களங்கப்படாத தாலி பெண்கள் வெட்டும் போது தான் களங்கப்பட்டு விட்டதா ?

ஒடியன் லட்சுமணன் சமத்துவ கழகத்தின் சார்பில் மகளிர் தினத்தையொட்டி தாலி அகற்றும்.நிகழ்வு நேற்று கோவையில் நடைபெற்றது அந்த செய்தி தினத்தந்தியி்ன் கோவைப்பதிப்பில் வெளியாகியிருந்தது இதைப்படித்துப் பொங்கிய இந்து முண்னனியினர் தாலியின் புனிதத்தை சமத்துவ கழகம்.கெடுத்துவிட்டதாகவும் அதன் பொறுப்பாளர் கார்க்கி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து […]

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா சிறுபான்மையினர்? என்ன செய்ய வேண்டும் பெரும்பான்மை இனம்…

ஜி. கார்ல் மார்க்ஸ் நண்பர்களுடனான நேற்றைய உரையாடல் பிரம்மாண்ட ‘ஆதியோகி’ சிலையில் தொடங்கி, மோடி, எடப்பாடி பழனிசாமி வழியாகப் பயணித்து ‘வந்தேறி மாட்டின்’ முகநூல் பக்கத்தில் புர்காவைக் கிண்டலடித்து அவர்கள் போட்ட மீம்ஸின் கமெண்ட்டில் போய்க் கொந்தளிக்கும் இஸ்லாமிய நண்பர்களின் செயலில் வந்து முடிந்தது. […]

போதும் இந்த நாடகம்!

கதிர் வேல் சசிகலாவை நேருக்கு நேர் சந்தித்தது இல்லை. அவருடன் பேசியதும் இல்லை. எனவே ஒரிஜினலாக எந்த கருத்தும் கிடையாது. தனிப்பட்ட துவேஷத்துக்கு இடமே இல்லை. ஆனால், நாட்டின் மிக உயர்ந்த கோர்ட் சசிகலா யாரென்று அடையாளம் காட்டி விட்டது. அதன் தீர்ப்பை வாசிக்கும்போது, […]

சசிகலா மீது மக்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?

சரவணன் சந்திரன் நாலாங் கிளாஸ் படிக்கிற பையன் ஒருத்தன் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தானாம். அப்போது ஒரு பாலை சிக்ஸருக்கு அனுப்பிய போது, என் வாழ்க்கையில இப்படி ஒரு ஷாட்ட பாத்ததே இல்லை என்றானாம். அதைப் போலத்தான் எனக்கும் சின்ன வயதுதான். ஆனால் என் வாழ்க்கையில் […]

ஓபிஎஸ்ஸுக்கு திமுக ஆதரவு: சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்னது ஆழம் பார்க்கத்தானா?

சரவணன் சந்திரன் விமர்சனம் என்று வந்துவிட்டால் அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. நேற்று பத்திரிகையாளரிடம் பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன், தெளிவான குரலில், பன்னீர்செல்வத்தை சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். வழக்கமாக இதுபோன்ற ஸ்டேட்மெண்டுகளின் முன்னாலும் பின்னாலும் […]

கடலில் கழிவை கொட்டுவது பன்னாட்டு கம்பனி., சுத்தம் செய்வது நம் மாணவர்களா?

நியாண்டர் செல்வன் பத்து ஆண்டுகளுக்கு முன் லூசியானா கடலில் ப்ரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பனி உலகின் மிகப்பெரிய ஆயில் கசிவை நிகழ்த்தியது. அதற்கு தண்டனையாக ஆயிலை சுத்தபடுத்தும் செலவை ஏற்றதுடன், ஆயில்கசிவால் பாதிப்படைந்த கடற்கரைகள், கடற்கரையோர வீடுகள், உணவகங்கள் என அனைவரின் வணிக பாதிப்பையும் ஈடுகட்ட […]

வாளியுடன் மக்கள்: குற்ற உணர்ச்சியிலிருந்து மீள முயலும் மொன்னைத்தனம்!

ஜி. கார்ல் மார்க்ஸ் இப்போது சென்னையில் நடந்திருப்பதைப் போன்ற கப்பல் விபத்தும் அதன் விளைவாக கடலில் எண்ணெய் கசிவதும் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியது தானா? ஆமாம். இத்தகைய விபத்துக்கள் நடக்கக்கூடியவைதான். கசிந்திருக்கும் எண்ணெயில் உயிருக்கு ஆபத்தான H2S போன்ற வாயுக்கள் கலந்திருக்க வாய்ப்பு […]

‘அதிகாரியின் சாட்சியம்’: காவலர்களை நாயகர்களாக்கும் தேவை என்ன?

பழனி ஷஹான் ‘அதிகாரியின் சாட்சியம்’ என்று புதிய தலைமுறை ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அது காவல்துறை அதிகாரி ஒருவர் மெரினா புரட்சியில் ஆற்றிய பணி பற்றியது. உண்மையில் மெரினா புரட்சியின் ஆரம்ப நாட்கள்தொட்டு, ஊடகம் செயல்பட்டவிதத்தை நான் மனதார பாராட்டி கூட்டங்களில் பேசினேன். போராட்டாக் […]

போலீஸ் அடித்ததில் கருச்சிதைவுக்கு ஆளான பெண்; உண்மை அறியும் குழு அறிக்கையில் அதிர்ச்சி…

ஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள் குறித்து அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்… ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுமையிலும் இந்த மாதம் 17-ம் தேதி முதல் […]

ஜெயலலிதா ஏன் சசிகலாவை அரசியல் களத்தில் நிறுத்த விரும்பியதில்லை, அனுமதிக்கவில்லை?

அறிவழகன் கைவல்யம் அ.தி.மு.க வின் பொதுச் செயலாளராக திருமதி.சசிகலா, அந்தக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது, இந்த நியமனம் அ.தி.மு.க வின் விதிகளுக்கு உட்பட்ட தனித்த முடிவு. இந்த முடிவின் மீது விமர்சனம் வைக்கப்படுவதும், மறுபுறம் அது அவர்களது உட்கட்சி […]

தேர்வு மண்டபத்தில் அதிமுக!

கதிர் வேல் ஒரு டூரின்போது வண்ணாரப்பேட்டை பிடபிள்யுடி கெஸ்ட் அவுசில் தங்கினார் எம்ஜிஆர். கட்சிக்காரர்கள் சந்தித்து பேசினார்கள். கட்சியில் இல்லாதவர்களும் போயிருந்தோம். கெடுபிடி ஏதும் இல்லை. லோக்கல் நிர்வாகிகள் சிலர் நீக்கப்பட்டு புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர். அதில் சர்ச்சை ஓடிக் கொண்டிருந்தது. ஜி […]

மைக்ரோ பாசிசமும் பேரழிவிற்கான முன்தயாரிப்பும்!

ஜமாலன் schadenfreude என்றொரு சொல் உள்ளது ஆங்கிலத்தில் ஜெர்மனிலிருந்து உள்வாங்கப்பட்டு ஆளப்படுவது. இதன் பொருள் “மற்றவரின் துன்பத்தில் மகிழ்வது. மற்றவரின் துரதிருஷ்டத்தில் அல்லது தோல்வியில் மகிழ்வை உணர்வது.” இது பொறாமை என்ற உணர்வல்ல. பொறாமை மற்றவரின் வளர்ச்சியைப் பார்த்து வருவது. இது அடுத்தவரின் வீழ்ச்சியில் […]

பொது சிவில் சட்டம் இந்துகளுக்குள் முதலில் கொண்டு வரவேண்டும்: கிருஷ்ணசாமி

பொது சிவில் சட்டம் இந்துகளுக்குள் முதலில் கொண்டு கொண்டுவர வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். “ஒரு நாட்டுக்கு பொதுவான சிவில் உரிமைச் சட்டம் இருக்க வேண்டுமென்பதை நாம் மறுக்க முடியாது. கண்டிப்பாக பொது சிவில் சட்டம் இருக்க வேண்டும். […]

வளர்ச்சியின் பெயரால் அதிகாரவர்க்கம் ஏமாற்றிக்கொண்டேதான் இருக்கிறது!

ரபீக் ராஜா   மதுரையில் இருந்து, கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் உள்ள ஊர் தாமரைக்குளம். காரியாபட்டியிலிருந்து இடது புறம் திரும்பி, குண்டுங்குழியுமான சாலையில், தையத்தக்கா பயணம். தோழர் தமிழ் தாசன் லாவகமாக வண்டி ஓட்டினாலும், கொஞ்சம் பயம் தான். சாலைதான் குண்டுங்குழி., காற்று […]

‘தியேட்டரில் எழுந்து நிற்பதெல்லாம் தேசபக்தியாகிவிடாது’: எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் கருத்து

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இழிவுபடுத்தப்படுவதாக, போபாலை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் ஷ்யாம் நாராயணன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனைத்து திரையரங்குகளிலும் படம் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதத்தை கண்டிப்பாக இசைக்க வேண்டும் என உத்தரவு […]

ஃபிடலை எவ்வாறு மதிப்பிடலாம்?: யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன் என் வாழ்நாளில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை நான் படிக்கிறேன். படிப்பதற்கு இன்னும் அதிக நேரம் கிடைக்கவில்லையே என்றுதான் எனக்கு மனசு வலிக்கிறது. எல்லா வகையான இலக்கியங்களையும் நான் படிக்கிறேன். எனது காப்பியங்களில் பைபிளும் அடங்கும். எனது வார்த்தைப் பிரயோகங்களை அலசுகிற […]

‘நம்ம பையன்ப்பா. நாசமாயிடக்கூடாதுல்ல’!

சரவணன் சந்திரன் பரபரப்பான அரசியல் விவாதங்களுக்குப் பெயர் பெற்ற தந்தி டீவியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், சிவகார்த்திகேயனுக்கு என்ன வேலை? இது பொதுவான அரசியல் நிகழ்ச்சிதானே என்று சொல்லக்கூடும். ஆனால் இதற்கு முன்னர் இப்படி ஏதேனும் நடிகர்கள் அந்நிகழ்ச்சியில் அணிவகுத்திருக்கின்றனரா என்கிற கேள்வியைக் கேட்டுப் […]

எச்சரிக்கை: தமிழகத்தின் டொனால்ட் ட்ரம்புகள்!

அருண் நெடுஞ்செழியன் நிலவுகிற தாராளமய பொருளாதார கட்டத்தில் (அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய யூனியன்) ஏகாதிபத்தியத்தின் மூலதன விரிவாக்கத்திற்கான சுரண்டல் உச்சத்தை அடைந்துள்ளது. உலகம் தழுவிய அளவில் குறிப்பாக ஆசியா, இலத்தீன் அமெரிக்கா போன்ற அரை தொழில்மய மூன்றாம் உலக நாட்டு மக்களும், ஆப்பிரிக்கா போன்ற […]

புதிய ரூபாய் நோட்டுகளில் தேவ நாகரி மொழி எழுத்துகள்: அதென்ன மொழி?

இளங்கோ சிவன் தேவநாகரி எழுத்தில் புதிய ரூபாய் நோட்டுகளில் எண்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. அது என்ன தேவ நாகரி எழுத்து. தேவர்கள் எப்பொழுது எழுத்தை கண்டுபிடித்தார்கள். சரி இல்லையெனில் ஏன் அந்த எழுத்துக்கு அவ்வாறு பெயர் கொடுக்கப்பட்டது. கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து […]

சாதாரண மக்களுக்கு பொருளாதார அவசர நிலை; கருப்புப் பணக் குற்றவாளிகளுக்கு புதிய வாய்ப்புகள்: திபங்கர் பட்டாச்சார்யா

திபங்கர் பட்டாச்சார்யா “தேசியப் பாதுகாப்பு“ குறித்தும் “பொறுப்பான ஊடகச் செயல்பாடு“ குறித்தும் NDTVக்கு பாடம் கற்பிப்பதற்காக, அந்தத் தொலைக்காட்சி ஒலிபரப்பை நிறுத்த வேண்டும் என்பதற்காகக் குறிக்கப்பட்ட நாள் நவம்பர் 9. நாடு முழுவதும் இந்த அறிவிக்கப்படாத அரசியல் நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அரசு […]

இது ஒரு விஜயகாந்த் / அர்ஜூன் நடிக்கும் “தேஷ் பக்தி” மசாலா திரைப்படம்!

வாசுதேவன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட சில தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பொதுத்துறை வங்கிகள் திரும்பி வராத கடன்கள் என்று 2004 இல் இருந்து 2015 ஆம் ஆண்டுவரை 2.11 லட்சம் கோடிகளை கணக்கிட்டுள்ளது. […]

போபால் என்கவுன்டர் படுகொலை போலியானது: அ. மார்க்ஸ்

போபால் என்கவுன்டர் படுகொலை போலி என்பதற்கான நிரூபணங்கள் வெளியாகியுள்ளன என தனது முகநூலில் கருத்து தெரிவித்துள்ளார் மனித உரிமை செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான அ. மார்க்ஸ். இது குறித்து தனது பதிவில், “காலையில் இந்தச் செய்தி கேள்விப்பட்ட போதே நாம் மனதிற்குள் உணர்ந்ததுதான். எனினும் முழு […]

ஜெயலலிதா உடல்நலம் குறித்து தங்களுக்குள் பேசிக்கொண்ட வங்கி ஊழியர்கள் கைது!

ச. பாலமுருகன் இன்று 14.10.2016 கோயமுத்தூர் தொண்டாமுத்தூரில் கனரா வங்கி ஊழியர்கள் வங்கியில் தங்களுக்குள் முதல்வரின் உடல்நிலை குறித்து பேசி வந்ததாகவும் அதனை வாடிக்கையாளரான அ.தி.மு.க உறுப்பினர் கேட்டு போலிசில் புகார் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் வதந்தி பரப்புதல், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு […]

கருத்து: மாதவிடாய் நாட்களில் விடுமுறை வேண்டும்!

நிலவுமொழி செந்தாமரை மாதவிடாயின் அதீத உதிரப்போக்கு ஒரு பெருங்கொடுமை மட்டுமின்றி அருவருப்பான விஷயமும் கூட. வெளியில் செல்லவும் முடியாது. திடீர் திடீரென கட்டி கட்டிய இரத்தம் வெளியேறி, உடைகளில் கறைபடிந்து எல்லோர் முன்னிலையும் நிற்க வேண்டி வரும். காலத்திற்குமான அவமானமாய் பெண்கள் இதனை கருதுகின்றனர். […]

குற்றமே தண்டனை: மணிகண்டனின் காக்கா முட்டையிலிருந்து மேம்பட்ட படைப்பு!

ஜோஸ் ஆண்டன் ‘காக்கா முட்டை’ யில் கதைக்காக சேரி மக்களின் வாழ்க்கை ஒட்டவைக்கப்பட்டது. சேரி மக்களின் அன்றாட வாழ்வியல் எதார்த்தமும், கூறுகளும் தெளிவாக அதில் காட்சிப்படுத்தப்படவில்லை. அவர்களின் வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாததுதான் அதற்குக் காரணம். பின் பாதியில் படத்தின் கதையை முடிப்பதற்காக சங்கர் […]

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை பலவந்தப்படுத்தி காதலிக்கும் சினிமா எடுப்பீர்?

அருண் பகத் குடும்பம் உள்ளிட்ட பண்பாட்டு அமைப்புகள் ஆண் திமிரை வளர்த்தது போலவே…காதலை ஒப்புக் கொள்ளாத பெண்ணிடம் குட்டிக்காரணம் போட்டு , குரங்கு சேட்டை பண்ணி , பலவந்தம் செய்துக் கொண்டேயிருந்தால் காதலை ஒப்புக்கொண்டு விடுவாள் என்ற கருத்தை இளைஞர்கள் மனதில் பிரம்மாண்டமாக விதைத்ததில் […]

முகநூலில் ஸ்டிரைக் செய்வது, ஹாஸ் டேக் டிரண்டிங் ஆக்குவது, முகப்புப்படம் மாற்றுவது இதெல்லாம் எப்படி போராட்ட வடிவங்களாகும்?

சம்சுதீன் ஹீரா முகநூலில் ஸ்டிரைக் செய்வது, ஹாஸ் டேக் டிரண்டிங் ஆக்குவது, முகப்புப்படம் மாற்றுவது இதெல்லாம் எப்படி போராட்ட வடிவங்களாகும், இதன்மூலம் என்ன செய்துவிட முடியும்? என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள். மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் வானரப்படைகளின் ஆட்டமும் கொக்கரிப்பும் எல்லைமீறிச் சென்றதை நாம் […]