வகை: தலித் ஆவணம்

வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?

தங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரத்திற்கான குலக்குறியாகக் கருதி தேவரை ஒரு அரசியல் தலைவர் என்பதை விடவும் புனிதர் என்று கட்டமைப்பது இங்கு ஊடகத்தில் ஆட்சி பெற்றிருக்கும் இவர்களுக்கு அவசியமாகிறது.

Advertisements

”தலித் மக்களை ஒன்றிணைத்து அரசியல் அதிகாரத்துக்காக போராடுவதே என் நோக்கம்” டாக்டர் கிருஷ்ணசாமியின் ஃபிளாஷ்பேக் பேட்டி

1998-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் ஷோபா வாரியாருக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க்ருஷ்ணசாமி அளித்த பேட்டியின் ஒரு பகுதியை இங்கே தமிழாக்கம் செய்திருக்கிறோம். நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம், இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம், தேவேந்திர குல வேளாளர்களை தலித் பட்டியலில் இருந்து […]

“பன்றி” யார்? : பகுதி -3 

தேசிய/மாநில விருது பெற்ற இயக்குனர் ரோஹித், முத்து கிருஷ்ணனின் மரணத்தை முன்னிட்டு தலித் அமைப்புகளை குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறார்…

“பன்றி” யார்? : பகுதி -2

வசந்தபாலனுக்கு மாடம் வைத்த தலித் வீட்டில் “நிலா காய்கிறது” பாடல் கேட்டால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது. ஏனென்றால் ஒரு சாதி இந்துவின் மனதில் தலித்துகளை பற்றி அவர்களே உருவாக்கி கொண்ட கற்பிதங்களும் சித்திரங்களும் தலித்துகள் குறித்து கேள்விகளுக்கு அப்பாற்பட்ட தெளிவான வரையறையை கொடுத்துள்ளது.

“பன்றி” யார் ?

சாதிய படிநிலையில் தனது இருப்பை அறிவித்துக்கொள்பவன் தனக்கு மேல் இருப்பவனிடம் கொஞ்சமும் வெட்கமின்றி அடிமையாகவும் தனக்கு கீழ் உள்ளதாய் அவன் நம்புபவர்களின் உழைப்பை சுரண்டுபவனாகவும், ஏய்த்து பிழைப்பவனாகவும், அவர்களது எல்லா சமூக கலாச்சாரா பொருளாதார ஆதாரங்களையும்  இழிவு செய்பவனாகவும் எண்ணிலடங்கா கொலைகளும் வன்புணர்ச்சிகளும் செய்யும் ஒரு விலங்காகவும்  ஆகிறான். இப்படிபட்ட  சாதிய பெயரை சூட்டி கொள்ளும் தற்குறிகள் குறித்துதான் திரு கரு. பழனியப்பன் விருந்துண்ணுபவர்கள் என்கிறார்.

மனிதம் இல்லா சாதிய தேசம்

முருகன் கன்னா உள்ளாட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பிரநிதிதுவம் வேன்டும் என்ற அடிப்படையில் தமிழக சட்டமன்றத்தில் 1978 ஆம் ஆண்டு உள்ளாட்சியில் இடஒதுக்கீடு அமுல்படுத்த வேன்டும் என்ற கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்ட வாசுதேவநல்லூர் (தனி)தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.கிருஷ்னன் வழக்கறிஞர் […]

நீதிபதிக்குரிய கண்ணியம்கூட இல்லையா? நீதிபதி கர்ணனுக்கு ஆதரவாக எழும் குரல்கள்!

உச்ச நீதிமன்றத்தால் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிபதி கர்ணன், செவ்வாய்கிழமை மேற்கு வங்க போலீஸாரால் கோவையில் கைதுசெய்யப்பட்டார். நீதிபதி கர்ணன், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை மறுபரிசீலனை செய்யும்படி மூன்று முறை மனு செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தால் அவை தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் அவருடைய […]

அயோத்திதாசரின் ஒரு பைசாத் தமிழன் தொடங்கப்பட்ட நாள் இன்று!

தமிழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அயோத்திதாசரின் சிந்தனைத் தொகுதிகள் அழுத்தமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.

ஆதித்ய நாத் சாதி அழுக்கிலிருந்து சுத்தப்படுத்திக்கொள்ள 16 அடி சோப்பு: விசிக அனுப்பியது!

தலித்துகளை இழிவுபடுத்திய உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்தியநாத் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கிற ஆதித்தியநாத்தின் வருகையொட்டி தலித் மக்கள் குளித்துவிட்டு வரவேண்டும் என்று சொல்லி உத்தரபிரதேச அரசாங்கத்தின் […]

தீண்டாமையை ஒழிக்க போன இடத்தில் தீண்டாமையை கடைப்பிடித்த எடியூரப்பா!

கர்நாடக பாஜக தலைவரான பி.எஸ். எடியூரப்பா, சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கெல்கொட்டெ என்ற கிராமத்தில் உள்ள தலித் ஒருவரின் வீட்டில்  கடந்த 19-ம் தேதி உணவருந்தினார். இவர் உண்டது அவர்கள் வீட்டில் தயாரித்தது அல்ல, உணவகத்தில் வாங்கிய உணவு என தெரியவந்ததால் அந்த நிகழ்வு […]

ஊடகச் சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: திருமாவளவன்

நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தும், ஊடகங்கள் அவரது பேட்டிகளையோ அறிக்கைகளையோ […]

மார்க்சியவாதி என தயவு செய்து அழைத்துக் கொள்ளாதீர்கள்! : மீனா சோமு

மீனா சோமு “கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கொண்டு தங்களை தலித்துகளாக உணர்வதென்பது, அவர்கள் இன்னும் சாதியை கடக்கவில்லை என்று கருதுவதற்கே இடமளிக்கிறது.” கட்சிகள் அமைப்புகள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்!” -தோழர் Kotravai N தலித் என்பது ஜாதியல்ல, தலித் என்பது ஒடுக்கப்பட்ட மக்கள் […]

ஒருவேளை ஆர்.எஸ்.எஸ்.சின் நடவடிக்கைகளில் ஒன்றோ? : சி.மதிவாணன்

சி.மதிவாணன்   ரங்கநாயகம்மா இயங்கியல் பொருள்முதல்வாதம், ஆய்வு முறை என்று எதனையும் அறியாதவர் என்று குறிப்பிட்டு நான் எழுதினேன். அதற்கும் பதிலில்லை. அம்பேத்காரைப் பற்றிய தோழர் வினோத் மிஸ்ராவின் (1990கள்) கட்டுரையைக் கூட விவாதத்திற்கு வைத்தேன். அக்கட்டுரையின் அடிப்படையைப் பற்றிப் பேசக் கூட பயந்து […]

கம்யூனிஸ்ட்கள் தங்களை தலித்துகளாக எண்ணக்கூடாது ; நிர்மலா கொற்றவையின் புதிய கருத்து…

மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் எழுத்தாளர் கொற்றவை. ‘கம்யூனிஸ்டுகள் தங்களை கம்யூனிஸ்டுகளாக மட்டுமே எண்ண வேண்டும். தலித்துகளாக உணரக்கூடாது’ என தனது முகநூல் பதிவில் எழுதியுள்ள கருத்து விவாதங்களை கிளப்பியுள்ளது. Kotravai N: கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கும் தோழர்கள் தங்களை கம்யூனிஸ்டுகளாக உணர வேண்டுமே அல்லாது […]

ரசித்துக் காதலித்த ஒருவனின் நினைவை எப்படி மறக்கமுடியும் ? கவுசல்யா சங்கரிடம் இளவரசனின் திவ்யா உருக்கம்…..

Gowsi Shankar இன்று! என்னைப்பற்றிய அறிமுகமில்லாத ஒரு ’தோழரை’ அவங்க வீட்டுக்குப் போய் சந்திச்சேன்! ஆனா? அவங்களப்பத்தி எனக்கு நெறையா அறிமுகமிருக்குது. அந்தத் தோழரை சந்திச்சுப் பேசற வரைக்கும்,அவங்க மேல இருந்த ’எண்ணம்’ வேற! ’எங்களுக்கு’ முன்னாடி தமிழ்நாடே ஒட்டுமொத்தமா, அந்தக் கொடூர நிகழ்ச்சியத் […]

தலித்துகள் தொழில் செய்யக்கூடாதா?

கருப்பு கருணா திருவண்ணாமலையிலிருந்து எட்டு கிமீ தூரத்தில் உள்ளது சோமாசிபாடி எனும் கிராமம். இங்குள்ள காந்திநகர் குடியிருப்பில் முழுதும் உடலுழைப்பு தொழிலாளிகள்.அதிலும் செங்கல் அறுப்பதிலும் சூளை வைப்பதிலும் கெட்டிக்காரர்கள். த மு எ க ச வின் கலை இலக்கிய இரவு சமயங்களில் படையாக […]

நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா தனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக […]

குடும்பத்துக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வரி வசூலித்து நடத்தப்பட்டதா அருந்ததியர் மீதான வெறிதாக்குதல் ?

முத்துகிருஷ்ணன் ராஜபாளையம் அருகே கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் வாழும் அருந்ததியர் மக்கள் மீது ஜாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியுள்ள செய்திகள் தொடர்ந்த பல நாளிதழ்களில் வெளிவந்த வண்ணம் உள்ளது. தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன, குடிசைகளை கொளுத்தப்பட்டுள்ளன, சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன, பலர் காயமடைந்து மருத்துமனைகளில் சிகிச்சை […]

விவாதம்: “கக்கூஸ்” ஆவணப்படத்தை பார்க்கணும்; ஆனால், அது பேசும் அரசியலை நிராகரிக்கணும்”

மீனா சோமு திவ்யா பாரதி இயக்கிய, “கக்கூஸ்” ஆவணப்படம் பார்த்தேன். மலத்தோடு அதன் நாற்றத்தோடு செத்துக் கொண்டிருப்பவர்களை பற்றிய ஆவணம் அது. 1.30மணி நேரம் ஓடிய ஆவணப்படம், நம் சமூகத்தின் கேடுகெட்ட நிலையை முகத்தில் மலத்தை அறைந்து சுட்டுகிறது. மலம் அள்ளும் பணியாளர்கள் இல்லையென்று […]

பொது குழாயில் நீர் எடுக்கச் சென்ற அருந்ததிய மக்கள் மீது தாக்குதல்

ரபீக் ராஜா தொட்டியபட்டி கிராமம், கொத்தங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது. தனித்தொகுதி. தொட்டியபட்டியில் ஏறக்குறைய 400 குடும்பங்கள் நாயுடு சாதியினர். 50 குடும்பங்கள் அருந்ததியினர். கடந்த 30.03.2017 அன்று, அருந்ததியினர் காலனி குடியிருப்பில் உள்ள 43 வீடுகளை அடித்து நொறுக்கியும், 3 வீடுகளை எரித்தும், சோற்றுப் பானை, […]

“இளவரசனாகவோ,ஷங்கராகவோ, கோகுல்ராஜாகவோ, நான் விரும்பவில்லை”: ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணனின் பதிவு…

ஜேஎன்யூவில், தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் முத்துகிருஷ்ணன், கடந்த வருட ஜூலை மாதம் பல்கலைகழகத்திற்குள்,  தான்,  சென்ற பாதைகளைப் பற்றி எழுதி இருந்தவற்றை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறோம். Rajini Krish  July 26, 2016 நான்காவது வருடமாக ஜேஎன்யூ-விற்கு  வருகிறேன். மூன்று  முறை எம்.ஏ […]

பயணச் செலவுகளுக்குக் கூட பணம் இல்லாமல் டெல்லி சென்ற கிருஷின் அப்பா; உடலைக் கொண்டு வர அரசு உதவ வேண்டுகோள்

மர்மமான முறையில் இறந்த  தமிழகத்தைச் சேர்ந்த ஜே.என். யூ பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் உடலைக் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என அவருடைய உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முத்துகிருஷ்ணன் உடலை பார்க்க டெல்லி சென்றிருக்கும் அவருடைய தந்தை ஜீவநாதனின் பயண செலவுகளுக்கு சேலத்தில் […]

சம உரிமை மறுக்கப்பட்டால் அனைத்து உரிமையும் மறுக்கப்பட்டதாகவே அர்த்தம்: தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவரின் கடைசி பதிவு…

ஜே.என்.யூ பல்கலையில்  வரலாற்றுப் பிரிவில் எம்.பில் படித்துக் கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பரின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார். திங்கள் கிழமை மதிய உணவு உண்டதும்  உடல் நிலை சரியில்லை என்று கூறிவிட்டு, அறைக்குள் […]

தென்மாவட்ட சாதிய கொலைகளுக்கு சிபிஐ விசாரனை தேவை

முருகன் கன்னா நெல்லையில் காவல்துறையின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் பாளை சிறையில் இருந்து சிங்காரம் என்பவர் வாய்தாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் அழைத்து செல்லும் வழியில் மர்ம நபர்களால் வெட்டி படுகாலை செய்யப்பட்டுள்ளார். தென்மாவட்டங்களில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட சாதிய படுகொலைகள் நடந்துள்ளது. […]

அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை; நாங்களே சாணியை கழுவி விடுகிறோம் என்று போலீசார் கெஞ்சல்…

அ.இ.அழகுமுத்து கொணஸ்டான் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அத்திப்பாடி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் (VAO) எதிரே உள்ள அம்பேத்கர் சிலை மீது நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் சாணி அடித்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை […]

‘உங்கள் கட்சியையும் ஆட்சியையும் சக்கிலியர் மீதான அவதூறைச் சொல்லித்தான் காப்பாற்ற வேண்டுமா?’

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், ‘தாழ்த்தப்பட்ட’ சமூகத்திலிருந்து வந்தவன் என்றும் பாராமல் திமுகவினர் நடந்துகொண்டதாக தெரிவித்த கருத்துகள் விவாத்தை கிளப்பியுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டமன்றம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி […]

அதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்!

சி. மதிவாணன் அஇஅதிமுகவின் கொள்ளையர்கள் தேவைப்படும்போது மக்கள் நலன் என்று பேசுவார்கள். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அல்லது சலுகை கொடுப்பதுதான் மக்கள் நலன் என்பது அவர்கள் எண்ணம். மற்றபடி அரசு என்பது கொள்ளையடிக்கக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ். அவ்வளவுதான். இதனைத்தான் முதல் குற்றவாளி ஜெ மீது […]

“குற்றவாளியை ஊக்கப்படுத்துகிறார் நிர்மலா பெரியசாமி” : ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம்

நந்தினி கொலை வழக்கு தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் குற்றவாளியை ஊக்கப்படுத்தும் விதமாக அதிமுக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி பேசியதாக ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 4-2-2017 அன்று புதிய தலைமுறை டிவி – ‘நேர்படப் பேசு’ நிகழ்ச்சியில் அரியலூர் தலித் சிறுமி நந்தினியின் […]

நிர்மலா பெரியசாமி, பானு கோம்ஸ் வரையறுக்கும் ஒழுக்கம் பட்டியலின பெண்களுக்கு மட்டும்தானா?

முருகன் கன்னா தொலைகாட்சி ஊடகங்களிலும் சமுக ஊடகங்களிலும் நடத்தும் விவாதங்கள் தற்போது மிகவும் முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. இது ஆரோக்கியமான ஒன்றாக இருக்க வேன்டும். ஆனால் இதில் சில ஆரோக்கியமானதாகவும் சில சம்பிரதாய அடிப்படையில் கூட விவாதப் பொருளின் தன்மையை திசைதிருப்பி விடும் சூழல் […]

அரியலூர் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை- தீவிரமாகும் போராட்டம்

தலித், எது செய்தாலும் யாரும் கேட்க நாதி கிடையாது. நாம் இந்து முன்னணி, போலீசார் நம்மை எதிர்த்து எதுவும் செய்யமாட்டார்கள், பணத்தை விட்டெறிந்தால் யாரையும் விலைக்கு வாங்க முடியும். நாம பார்க்காத கோர்ட்டா, கேசா என்கிற காட்டுமிராண்டித்தனம்தான் நந்தினி படுகொலைக்கு காரணம் என்று மக்கள் […]

நெல்லை கர்ப்பிணிப் பெண் கல்பனா சாதி ஆணவ கொலை; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

முருகன் கன்னா நெல்லையில் கடந்த 2016 மே 3ஆம் தேதி தச்சநல்லூர் காவேரியும் வண்ணார்பேட்டை விஸ்வநாதனும் (இரயில்வே ஊழியர் ) காதலித்து திருமண‌ம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவேரியின் தந்தை சங்கரநாராயணனும் தாய் செல்லம்மாளும் விஸ்வநாதனின் குடும்பத்தினரிடம் சென்று எங்கள் மகளை […]

தலித் இளைஞர் எரித்துக் கொலை; மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை வழக்குப் பதிவு!

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பெரியபாபுசமுத்திரம் காலனியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் – லட்சுமி. இவர்களின் இளைய மகன் சதீஷ் (23). இவர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த புதன்கிழமையன்று சதீசை இரவு 10 மணியளவில் ரசபுத்திரப்பாளையம் ஏரிப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அடையாளம் தெரியாத 3 […]

மாநிலக் கல்லூரியில் தலித் மாணவர்களின் சான்றிதழ்களை கிழித்து, அம்பேத்கர் படத்துக்கு செருப்பு மாலை போட்ட சாதியம்!

கவுதம் ராஜன் தமிழகத்தின் தொன்மைமிகு கல்வி நிலையங்களில் ஒன்றான , சென்னையின் முக்கிய கல்லூரிகளில் ஒன்றாக இருப்பது மாநிலக் கல்லூரி. இங்கு, அனைத்து தரப்பு மாணவர்களும் தங்களது பட்ட படிப்புகளை இருபாலர் படித்து வருகின்றனர். மாணவர்கள் தங்குவதற்கென்று, விக்டோரியா என்ற பெயரில் மாணவர் விடுதி […]

மதம், சாதி, இனம், மொழியின் பெயரில் வாக்கு சேகரிக்க தடை; சாதி பார்த்து வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதற்கு தடை வருமா?

அன்புசெல்வம் மதம், சாதி, இனம், மொழி இவற்றின் பெய‌ரைச் சொல்லி தேர்தலில் வாக்கு சேகரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் மஹாராஷ்டிராவின் மனோகர் ஜோஷி (பாஜக) பிரச்சாரத்தை முன்வைத்து தொடர‌ப்பட்ட இவ்வழக்கின் தீர்ப்பு இது. இத்தீர்ப்பின் இருபெரும் நகலை படித்த பிறகே […]

31 தலித் எம் எல் ஏக்களைக் கொண்ட அதிமுக ஒருவரையாவது அமைச்சராக்க வேண்டும்: திருமாவளவன்

ஆளும் கட்சியில் அதிகார பகிர்வின் போது தலித்துகளுக்கு உரிய பிரிதிநிதிதுவத்தை அளிக்க வேண்டும் என  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல்.திருமாவளவன்வெளிச்சம் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். “மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் அமைச்சரவையில் தலித்துகளுக்கு மூன்று அமைச்சர் […]

அம்பேத்கர் பிறந்த நாளை ‘தண்ணீர் தின’மாகக் கொண்டாடும் மத்திய அரசு; சாதி ஒழிப்பை நீர்க்கச் செய்யும் முடிவு!

அ. குமரேசன் கடந்த நான்கு நாட்களின் பரபரப்புகளில் நழுவிவிட்ட இந்தச் செய்தி இன்றுதான் கண்ணில் பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை ‘தண்ணீர் தினம்’ என்று அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. “நாட்டின் அரசமைப்பு சாசனத்தை உருவாக்கியதில் மையமான பங்காற்றிய அம்பேத்கர், நீராதாரங்கள் நிர்வாகம் குறித்த […]

ஏன் என்னை பாதித்தான் ‘மாவீரன்கிட்டு’?

சதீஷ் செல்லதுரை நெல்லையில் கொடியங்குளம் கலவரத்தில் முன் நின்று மொத்த கிராமத்தையும் சூறையாடியது காவல்துறைதான்.. மன்னார்குடி தயவில் நெல்லையில் காவாலித்துறை போட்ட ஆட்டம் மறக்கவோ மன்னிக்கவோ இயலாதது. அந்த வரலாறு மாவீரன் கிட்டுவில் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் அரசியல்வாதிகளும் காவல்துறையும் ஆதிக்க சாதிகளால் […]

மாவீரன் கிட்டு: சாதி பிரச்னைகளை வெளிப்படையாகப் பேசும் முதல் தமிழ் சினிமா!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்தீபன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன் கிட்டு’ உண்மையான தலித் படம் என பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட சில குறிப்புகள் இங்கே… அதி அசுரன்: ஜீவா என்ற படத்தில், கிரிக்கெட் விளையாட்டிலும் தலைவிரித்தாடும் […]

1,10,000 ரூபாய் எப்படி வந்தது? போலீஸின் தொடர் டார்ச்சரால் நெல்லை விவசாயி தற்கொலை

முருகன் கன்னா நெல்லை பேட்டை அருகே கம்மாளன்குளத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலை குறித்து விசாரிக்கும் விதமாக கம்மாளன்குளத்தை சேர்ந்த விவசாயிகளை காவல்துறையினர் தொடர்ந்து துன்புறுத்தியுள்ளனர் அதில் ரமேஷ் (வயது 36) என்பவரும் […]

இரட்டை குவளை போல இரட்டைக் கல்லறை: கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை!

சிவகங்கை (கத்தோலிக்) மறை மாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர் பகுதியில் இருந்து ( தேவேந்திர குல வேளாளர்) எவருக்கும் “அருட் பொழிவு” குரு பட்டம் வழங்க 28 வருடங்களாக மறுக்கப்படுகிறது. 13 வருட பயிற்சிக்குப் பிறகு மைக்கேல் ராஜா என்ற தலித் கிறிஸ்தவருக்கு அருட் பொழிவுபட்டம் […]