வகை: திராவிட அரசியல்

திராவிட அரசியலை அழிப்பதா? வாக்கு அரசியலா?: தமிழகத்தில் என்ன வேண்டும் பாஜகவுக்கு….

கருணாநிதியை ஊழல்வாதி என்று நிறுவியதில் வலது சாரி அமைப்பினர் அடைந்த வெற்றி கருணாநிதியை மட்டும் பாதிக்கவில்லை. திராவிட இயக்கங்களின் மீதான பொது விமர்சனமாக மாறவும் வழி வகுத்துவிட்டது.

Advertisements

வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா?

தங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரத்திற்கான குலக்குறியாகக் கருதி தேவரை ஒரு அரசியல் தலைவர் என்பதை விடவும் புனிதர் என்று கட்டமைப்பது இங்கு ஊடகத்தில் ஆட்சி பெற்றிருக்கும் இவர்களுக்கு அவசியமாகிறது.

இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றி தமிழில் ஏதேனும் நாவல் இருக்கிறதா?

மனுஷ்யபுத்திரன் சாரு நிவேதிதா டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியிருக்கும் கட்டுரை மிக முக்கியமானது. சமூக அரசியல் இயக்கங்கள் ஏற்படுத்திய சமூக தாக்கங்கள் ஒரு பின்புலமாகக்கூட ஏன் நவீன தமிழ் இலக்கியப் போக்குகளில் குறிப்பாக நவீன இலக்கியத்தில் பிரதிபலிக்கவில்லை என்ற கேள்வியை நாம் விவாதிக்கத்தான் […]

வெக்கமற்ற அரசியல் ஆட்டம்!

பெங்களூரு சிறை தொட்டு திருவண்ணாமலை மூக்குப்போடு சித்தர் வரையிலும் கட்சியை தக்க வைக்கவும், ஆட்சியை கட்டுப்படுத்தவும் ஆசி அருள் கோரி அலைகிறார் டி டி வி.

#முரசொலி75: கமலின் பூணுல் போடாத கலைஞன் பிரகடனமும் பேசாமல் போன ரஜினியும்!

இது வெறும் விழாவாக சிலருக்கு தெரியலாம். ஆட்சியை பிடிக்க எத்தனிக்கும் ஒரு கட்சி பெரியார், பகுத்தறிவு, பார்ப்பன எதிர்ப்பு, திராவிடக் கருத்தியல் ஆகியவற்றை மைய நீரோட்டத்தில் ஒலிக்க விடுவது கவனிக்கத்தக்கது. இந்துத்துவ கும்பலை இது நிச்சயமாக குழப்பமுற செய்யும்.

திராவிட இயக்கத்தை அசைத்துப் பார்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது: எஸ்.வி.சேகரின் பேச்சுக்கு ஸ்டாலின் விளக்கம்

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் எழுத்தாளர் மதிமாறனுக்கும் பாஜக பேச்சாளர் நாராயணனுக்கும் இடையே நடந்த ‘பார்ப்பனர்’ தொடர்பான வாக்குவாதத்தில் எஸ்.வி. சேகர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதில் திமுக செயல்தலைவர் மு. க.ஸ்டாலினை தொடர்பு படுத்தி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகிறார் […]

நான் டெல்லிக்கு ஓடியதற்கு திமுக ஆட்சிதான் காரணம்: சாருநிவேதிதா

தமிழ்நாடே வேண்டாம் என்று தில்லிக்கு ஓடி விட்டேன். அந்த வகையில் தமிழ்நாட்டை விட்டு ஓடிய பிராமணர்களைப் போல் தான் நானும்.

கருணாநிதி வைரவிழாவில் திமுக செய்திருக்கும் பிரகடனம்!

நாடு முழுக்க ஒரு வலது சாரி அச்சம் படர்ந்துகொண்டிருக்கும் வேலையில் அவர் பெயரால் நிகழும் இந்த ஒருங்கிணைப்பு ஜனநாயகத்தின் மிக முக்கியமான ஒரு நகர்வு.

‘திராவிடம்’ 200 ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!”: அ. மார்க்ஸ்

தென்மாநிலங்களின் மொழிகள் வடமாநில மொழிகளான இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை எனவும் அவற்றை திராவிட மொழிகள் எனவும் மொழியியல் அடிப்படையில் நிறுவப்பட்ட உண்மை

சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் […]

அரசியலில் அரங்கேறும் குரங்கு கதை!

சரவணன் சந்திரன்   குரங்குகளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கதை சொல்வார்கள். இது உண்மையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காட்டுயிர் சார்ந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன். அதே சமயம் இந்த உதாரணம் மிகச் சிறந்ததும்கூட. கூண்டிற்குள் மாம்பழமோ ஏதோ ஒரு பழமோ வைத்து […]

”கருப்புத்துண்டு அமங்கலம்; அதை எடுத்துவிடுங்கள் என ஜெ. சொன்னார்”

அதிமுக அம்மா அணியின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் டிடிவி தினகரன் ஆளுமை மிக்கவர் எனவும் கருணாநிதி, வைகோ, ஜெயலலிதாவைக் காட்டிலும் ஜனநாயகவாதி எனவும் தெரிவித்தார். மதிமுகவிலிருந்து விலகி அதிமுக சேர்ந்தபோது கருப்புத்துண்டு அமங்கலம், அதை […]

இளம் ஜோடிகளை தெருவில் ஓடவிட்டு அடித்த காவிகள்: பெண்கள் தினத்தில் கேரளாவில் நடந்த அவலம்…

பெண்கள் தினமான நேற்று, கொச்சியின் மிகப் பிரபலான மெரைன் ட்ரைவில், “குடைக்குக் கீழேயான காதலுக்கு முடிவு கட்டும் போராட்டம்” என்று எழுதப்பட்ட பேனர்களுடன் வலம் வந்த சிவசேனா அமைப்பை சேர்ந்தவர்கள், அங்குக் கண்ணில் பட்ட இளம் ஜோடிகளைச் சரமாரியாகத் தாக்கத் துவங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல், […]

‘உங்கள் கட்சியையும் ஆட்சியையும் சக்கிலியர் மீதான அவதூறைச் சொல்லித்தான் காப்பாற்ற வேண்டுமா?’

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், ‘தாழ்த்தப்பட்ட’ சமூகத்திலிருந்து வந்தவன் என்றும் பாராமல் திமுகவினர் நடந்துகொண்டதாக தெரிவித்த கருத்துகள் விவாத்தை கிளப்பியுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்காக சட்டமன்றம் சனிக்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி […]

அதிமுகவும் சாதியும்; அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஒடுக்கப்படும் தலித்துகள்!

சி. மதிவாணன் அஇஅதிமுகவின் கொள்ளையர்கள் தேவைப்படும்போது மக்கள் நலன் என்று பேசுவார்கள். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அல்லது சலுகை கொடுப்பதுதான் மக்கள் நலன் என்பது அவர்கள் எண்ணம். மற்றபடி அரசு என்பது கொள்ளையடிக்கக் கொடுக்கப்பட்ட லைசென்ஸ். அவ்வளவுதான். இதனைத்தான் முதல் குற்றவாளி ஜெ மீது […]

சர்வாதிகார ஆன்மாவும் 134 அடிமைகளும்

அருண் பகத் அ.தி.மு.க அதிகாரம் திணறிச் சிதறிக் கொண்டிருக்கிறது. குனிந்து குனிந்து திருடித் தின்ற அடிமை எம்.எல்.ஏ க்களும் , பல மா.செ க்களும் , கவுன்சிலர்களும் உச்சக்கட்ட குழப்பத்தில் இருக்கிறார்கள். கையில் தற்போது இருக்கும் கனமான பொட்டியும் ,அரசியல் எதிர்காலம் குறித்த கவலையும் […]

முதலமைச்சரை மிரட்டியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: மு. க.ஸ்டாலின்

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மிரட்டி ராஜினா கடிதத்தில் கையெழுத்து வாங்கியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு. க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்கட்சி தலைவரைப் பார்த்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்” என்று அதிமுகவின் […]

சசிகலா முதல்வராவதற்குத்தான் மக்கள் வாக்களித்தார்களா?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வானதால் சசிகலா தமிழக முதலமைச்சராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. சசிகலா, தமிழக முதலமைச்சராக பதவியேற்க […]

கொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்?

சரவணன் சந்திரன் இரண்டு வகை அரசியல் இருக்கிறது. சட்டத்தை முன்னிறுத்திய அரசியல். சில சமயங்களில் சட்டத்தைத் தாண்டி தார்மீகத்தை முன்னிறுத்தும் அரசியல். முன்னதில் இம்மி பிசகாமல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது முதன்மையானதாக இருக்கும். மு.க.ஸ்டாலின் இப்போது சட்டத்தை முன்னிறுத்திய அரசியலைச் செய்து […]

சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா தமிழகம்?

ஜி. கார்ல் மார்க்ஸ் சசிகலாவிடம், “ நீங்கள்தான் கட்சியை வழிநடத்த வேண்டும்” என்று தொண்டர்களும், கட்சிப் பிரதிநிதிகளும் வலியுறுத்துவதாகவும், அவர் இன்னும் ஜெயலலலிதாவின் மரணத்தில் இருந்து மீளாத துயரத்தில் இருப்பதாகவுமான பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. அத்தகைய நாடகம் கடுமையாக விமர்சிக்கவும் படுகிறது. கட்சியின் ஒரு பிரிவு […]

ஓய்வெடுங்கள் சசிகலா!

அறிவழகன் கைவல்யம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக, அவரோடு கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வாழ்ந்து வந்த பெண்ணாக சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கும், சடங்குகள் செய்யவும், எல்லாவிதமான உரிமைகளும் இருக்கிறது, செல்லுமிடங்களுக்கு எல்லாம் (சிறை உட்பட) இணைபிரியாது சென்று […]

முதல்வரின் கான்வாய்…: திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் அஞ்சலி!

எஸ். எஸ். சிவசங்கரன் வழக்கமாக கான்வாய் கிளம்பினால், பயணிக்கப் போகும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்படும். போயஸ் கார்டன், வேதா நிலையத்தில் இருந்து முதல்வர் கான்வாய் கிளம்பினால் ராதாகிருஷ்ணன் சாலை, மெரினா சாலைகள் அலர்ட் ஆகும். சாலையின் இருபுறமும் கட்சி நிர்வாகிகள் நிற்பார்கள். காவல்துறையினர் பந்தோபஸ்த்திற்கு […]

“அண்ணா நாமம் வாழ்க என்ற இடி முழக்கத்தை இனி நாம் எங்கு கேட்கப்போகிறோம்”

ஜெயநாதன் கருணாநிதி: ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம் அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம் இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம் நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா! இறைவன் […]

“சமூக நீதியை ஒருபோதும் அவர் கைவிட்டதில்லை”

அறிவழகன் கைவல்யம் திராவிட அரசியல் இயக்கத்தின் அடிநாதமான சமூக நீதியை ஒருபோதும் அவர் தவறாகப் புரிந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை, அ.தி.மு.க என்கிற மிகப்பெரிய அரசியல் இயக்கத்தை கட்டுக்குலையாமல் ஆளுமை செய்த அவருடைய தீவிர உழைப்பு ஒருவகையில் காவிக் கோட்பாட்டை தமிழகத்தின் சமூக அரங்குகளில் […]

திமுகவின் போராட்ட குணம் எங்கே போனது?

வா. மணிகண்டன் கடந்த வாரம் திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பிசுபிசுத்துப் போனதாக உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள். பிற மாவட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. வழக்கமாக திமுகவின் போராட்டங்கள் குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக் […]

திருமங்கலம் ஃபார்முலா என்றால் என்ன? வழக்கறிஞர் கேள்வி மு. க. ஸ்டாலின் அளித்த பதில்

கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். அவர் முறைகேடுசெய்து வெற்றிபெற்றதாகவும் எனவே அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]

”செயற்கையான இந்த வெற்றி நீண்ட நாளைக்குச் சிறப்பைத் தராது!”: மூன்று தொகுதி முடிவுகள் குறித்து கருணாநிதி

இடைத்தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்… “தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் தி.மு.கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்த போதிலும், கழக வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்ற […]

ஆறுமுகத்துக்கு ’தீப்பொறி’ அடைமொழி தந்தவர் அண்ணாதான்: கருணாநிதி இரங்கல்

திமுகவின் முன்னணி பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் மறைவுக்கு கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமைக் கழக முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரும், தி.மு.கவின் முன்னோடிகளில் ஒருவருமான மதுரை தீப்பொறி ஆறுமுகம்நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு […]

நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” […]

’டெல்டா காஷ்மோரா’: மு. க. ஸ்டாலின் அதிர்ச்சி அறிக்கை

‘டெல்டா காஷ்மோரா’ என்ற பெயரில் ஜுனியர் விகடன் வெளியிட்ட கட்டுரை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின். அந்த அறிக்கையில், “தமிழகத்தின் பழம்பெரும் இதழ் “ஆனந்த விகடன்”. அதனை உருவாக்கிய திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள் பத்திரிகைத் துறையிலும், […]

மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்: ஸ்டாலின்

மவுலிவாக்கம் விபத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை உலுக்கிய சென்னை, மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிட விபத்தில் சிக்கி 61 பேர் […]

“இதுபோன்ற சடங்குகளுக்கு ஏழைக் குழந்தைகள்தான் கிடைத்தார்களா?”

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பூரண நலம்பெற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோயில்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்கிறது ஜெயா டிவி இணையதளம். மேலும் இந்த செய்தியில் தமிழகம் முழுக்க முதலமைச்சர் நலனுக்கான […]

“அதனால்தான் தேர்தல்களைச் சந்திக்கக் பயப்படுகிறார் ஜெயலலிதா”

ஜெயலலிதா ‘பூரண குணம்’ பெற வாழ்த்துக்கள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஏடான மாலெ தீப்பொறி வெளியிட்டுள்ள பதிவு: ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் வந்து கருணாநிதி முதல் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் அத்தனை பேரும் அவர் நலம் பெற்று பணிக்குத் திரும்ப வாழ்த்துச் சொன்னார்கள். மாபெரும் அரசியல் […]

வதந்திகளை உருவாக்கி உள்ளாட்சி தேர்தலில் பலனடையப் பார்க்கிறதா அதிமுக?

மனுஷ்யபுத்திரன் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக காவல்துறை தினமும் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் தமிழச்சி மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்தே இந்த வதந்திகள் மிகப்பெரிய அளவில் தொடர்ந்து பரவிக்கொண்டே […]

முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா?: கருணாநிதி

தமிழக முதல்வரின் உடல் நலம் குறித்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? என வினவியுள்ளார் திமுக தலைவர் மு. கருணாநிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா  ஒரு வார காலத்திற்கும் மேலாக – கடந்த  22ஆம் தேதி முதல், […]

சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுப்பு!

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அதிமுக பொதுச்செயலளார் திங்கள்கிழமை வெளியிட்டார். இதில் சென்னை மேயர் சைதை துரைசாமி உள்ளிட்ட ஏழு மேயர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், வேலூர், கோவை, திருநெல்வேலி மேயர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. திண்டுக்கல் மேயர் பதவி […]

குஜராத்தில் துவங்கி கோயம்புத்தூர் வரை

அறிவழகன் கைவல்யம் காவிகளின் தேசப்பற்று என்பது வெறும் பம்மாத்து, காவிகளின் தேசப்பற்று சொந்த மக்களைக் குண்டு வைத்துக் கொன்று கலவரத்தை உருவாக்கி அந்த நெருப்பின் மீது நின்று குளிர்காயும் நாகரீகமற்ற பித்தலாட்டம், பதன்கோட் தாக்குதலில் நிலவிய மர்மங்கள் இன்னும் அகலாத நிலையில் இப்போது யூரி […]

ஜெயலலிதா நலம் பெற்றுத் திரும்ப தலைவர்கள் வாழ்த்து

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதலமைச்சர் நலம்பெற்றுத் திரும்ப அரசியல் கட்சித் தலவர்கள் வைகோவும் மு. க. ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மு. க. ஸ்டாலின் < div class=”mtm _5pco”> உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக […]

“உடல் நலம் பெற்று, பணியினைத் தொடர வேண்டும்”: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி வாழ்த்து

காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் உடல் நலம் பெற்றுத் திரும்ப அதிமுகவினர் பல்வேறு வேண்டுதல்களிலும் வழிபாட்டிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திமுக தலைவர் மு. கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு உடல் நலம் பெற்று திரும்ப வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார். “முதல் […]

“நிகழ்வுகளில் பங்கேற்பது உங்கள் முன் கைகட்டி நின்று அறிவுரை கேட்க அல்ல!”: பாண்டேவுக்கு சுப.வீ திறந்த மடல்

அன்புள்ள திரு பாண்டே, வணக்கம். இன்று (17.09.2016) மாலை தந்தி தொலைக்காட்சியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்க என்னையும் அழைத்தமைக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்நிகழ்ச்சி இன்னும் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும், வெளி அரங்கில், பொது மக்கள் முன்னிலையில்தான் நடைபெற்றது என்பதால், அது […]