வகை: #புத்தகம்2016

இரா. முருகவேளின் முகிலினி: ஒன்றுப்பட்ட கோவையில் 60 ஆண்டு வரலாறு!

ஆறு மாசுபடுகையில் தொழிலாளி கண்டு கொள்ளவில்லை.  ஆலை மூடப்படுகையில் கிராம மக்கள் கண்டுகொள்ளவில்லை.  இவையிரண்டு செயல்களுக்கும் ஒத்திசைவு வேண்டுமா ? வேண்டாமா இது முருகவேள் எழுப்பும் கேள்வி .

Advertisements

” பார்த்தீனியம் ” நாவல் இலக்கிய உலகில் , தமிழ் ஈழ வரலாற்றில் நிலைபெறும் !

பீட்டர் துரைராஜ் அமுதன் அடிகள் இலக்கிய விருது மார்ச்சு மாதம் தமிழ் நதிக்கு வழங்கப்பட்டுள்ளது. வாசகசாலை இந்நாவலுக்கு திறனாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது. விகடன்.காமிற்காக நியாஸ் அகமது தொகுத்த 2016 ல் கவனம் கொள்ளத் தக்க நூட்கள் பட்டியலில் இதனைப் பரிந்துரைத்திருக்கிறார் பத்திரிக்கையாளர் மாரி செல்வராஜ். […]

நூல் அறிமுகம்: ஒரு இலக்கிய விமர்சகரின் பார்வையில் தமிழ் சினிமா

விஜயமகேந்திரன் உலக திரைப்படங்கள் குறித்தான பல புத்தகங்கள் வரும் சூழ்நிலையில் தமிழ் சினிமா குறித்தான புத்தகங்கள் வெகு குறைவாகவே பதிப்பிக்கப்படுகின்றன. உலக சினிமா, உலக சினிமா இயக்குநர்கள் பற்றி எழுதப்படும் புத்தகங்களுக்கு தமிழில் இருக்கும் சந்தை மதிப்பு தமிழ் படங்கள் குறித்தான புத்தகங்களுக்கு இல்லை […]

எழுத்தாளர் பிரேம்மின் ’அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்’: நூல் வெளியீடு தொடர் நிகழ்வுகள்

எழுத்தாளரும் கோட்பாட்டாளருமான பிரேம்மின் ‘அயோத்திதாசர் தொடங்கி வைத்த அறப்போராட்டம்’(ஆழி பதிப்பகம்) நூல் வெளியீடு ஞாயிற்றுக்கிழமை கவிக்கோ அரங்கில் நடைபெறுகிறது. நூலை வெளியிடுகிறார்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். இந்நூலின் அறிமுக நிகழ்வுகள் மதுரை, திருச்சி ஆகிய இரண்டு இடங்களிலும் நிகழ உள்ளது. […]

வரலாற்றுப் பிழையான ஜெயமோகன்: விகடன் தடம் நேர்காணலுக்கு தமிழ்நதி எதிர்வினை

தமிழ்நதி  ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக ‘தடம்’ இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதிலளித்திருக்கிறார் ஜெயமோகன். “முதலில் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை கிடையாது என்பது என் பார்வை… எந்தவோர் அரசும் தமக்கு எதிராக சில குழுக்கள் போரில் ஈடுபடும்போது அதை ஒரு போராகத்தான் பார்க்குமே […]

#வீடியோ: பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் ‘காம்ரேட்’ அறிமுகம்

பெற்ற பிள்ளையை வளர்க்க ஒரு தாய் படும் துன்பத்தையும், மகளை மணம் செய்து கொடுக்க ஒரு தந்தை படும் துன்பத்தையும் உலகின் மாபெரும் துன்பங்களாகவும், தியாகங்களாகவும் பதிவு செய்கின்றன இலக்கியங்கள். ஆனால் ஏற்றத் தாழ்வுகளற்ற ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க பல வகையான துன்பங்களையும் […]

#நிகழ்வுகள்: அருண் நெடுஞ்செழியனின் ‘அணுசக்தி அரசியல்’ நூல் வெளியீடு

அருண் நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய ‘அணுசக்தி அரசியல்’ என்ற நூல் சென்னையில் நாளை [24.7.2016] ஞாயிறு  மயிலாப்பூரில் உள்ள பரிசல் புத்தக நிலையத்தில் வெளியிடப்படுகிறது. நூலை எழுத்தாளர் பாரதி நாதன் வெளியிட, ஊடகவியலாளர் விஜய் ஆனந்த் பெற்றுக் கொள்கிறார். மேலும், மேற்கண்ட நூலைப் பற்றி ஒரு […]

காமிக்ஸ் பழங்குடியினரின் வாழ்வைச் சூறையாடுமா? ஓர் விவாதம்; ஓர் விளக்கம் – கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் தொன்மங்களுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ‘மாயாவி’ கட்டுரையை ஒட்டி //தற்போதைய வேதாளர், 21-ம் தலைமுறையைச் சார்ந்தவரான கிட் வாக்கர் என்றும், அவர் மனைவி ஐ.நா., சபையில் பணிபுரியும் டயானா பால்மர் என்றும் வாயைப் பிளக்க வைத்து, பழங்குடியினரின் வாழ்வியலைச் சூறையாடியது அமெரிக்க ஏகாதிபத்தியம்.// […]

தொன்மங்களுக்கு எதிராக களமிறக்கப்பட்ட ‘மாயாவி’ : கௌதம சித்தார்த்தன் 

கௌதம சித்தார்த்தன்  என் பால்ய பருவத்தில், காமிக்ஸ்களைத் தேடித் தேடிப் படித்திருக்கிறேன். எனக்கு இரும்புக்கை மாயாவியை ரொம்பப் பிடிக்கும். மாயாவியின் உலகம் பிரம்மாண்டமான சாகசங்கள் கொண்டது. நம்மூர் எம்ஜியார் போல. மாயாவி மாயமாய் மறைவதும், அந்தக் கை மட்டும் மறையாமல் நகர்ந்து நகர்ந்து சென்று கொள்ளையர்களைப் பிடிப்பதும் அபாரமாக இருக்கும். ஆனால், ரொம்ப நுட்பமான கதைப் போக்கெல்லாம் இருக்காது. ஆனால் சிஐடி […]

சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் : ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா சாகித்ய அகாடமி 2015 பிப்ரவரி 21,22 தேதிகளில் சென்னையில் நடத்திய “இலக்கிய முழுமையை நோக்கி- தலித் இலக்கியம்” என்கிற கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட கட்டுரை. தனிமனிதர்களின் அகநிலையையும் உலகு பற்றிய கண்ணோட்டத்தையும் வடிவமைப்பதில் இங்கு சாதியம் தீர்மானகரமான பங்கு வகிக்கிறது. மாற்றியமைக்கப்பட முடியாதபடி […]

#வீடியோ: நூல் அறிமுகம் ‘பிம்பச் சிறை’

எம் ஜி ஆர் என்ற ,பிம்பச் சிறைக்குள் தமிழக மக்கள் இப்பொழுதும் இருப்பது ஏன் என்று அக்கு வேர் ஆணி வேராய் அலசும் நூல் ‘பிம்பச் சிறை’ (பிரக்ஞை வெளியீடு). நூல் அறிமுகம் செய்கிறார் கார்த்திக் கோபாலகிருஷ்ணன்.

ஏன் தீர்ப்பை எதிர்க்கிறார்கள்: ச. தமிழ்ச்செல்வன்

Tamil Selvan கொங்கு வட்டாரத்தில் சாதிய அணிதிரட்டல் அரசியலை முன்னெடுக்க நினைப்போரும் மதவாத அரசியல் அணிதிரட்டலுக்காக உழைப்போரும் இந்தத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.அந்தப்பகுதி மக்களின் மனம் காயப்பட்டதைப் பற்றி உருகி உருகிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். This is called Appeasing. இந்த சக்திகளைத் தாண்டி பொதுமக்கள் […]

அந்தப் பதிவை நீக்கிவிட்டேன்: லீனா மணிமேகலை

சர்ச்சைகளை உருவாக்கிய அந்தப் பதிவை நீக்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார் கவிஞர் லீனா மணிமேகலை. என்ன சர்ச்சை என்பதை இங்கே படிக்கலாம். லீனாவின் விளக்கமளிக்கும் பதிவு கீழே: “பழனிவேள் தன் முகநூல் பக்கத்தில் எழுதும் பெண்களை இழிவுடுத்தி எழுதியிருந்தார் என்பதையும், அதைக் “லைக்கிட்டும்” “மெளனம் சாதித்தும்” உற்சாகப்படுத்திய […]

இலக்கிய சர்ச்சைகளை உருவாக்குவது எப்படி?

நடந்த முடிந்த புத்தக கண்காட்சியை ஒட்டி சர்ச்சைகள் ஏதும் இல்லாதது ‘சப்’பென்று இருந்தது என ஒரு தமிழ் நாளிதழ் கவலைப்பட்டது. அந்தக் கவலையைப் போக்கும் வண்ணம் முகநூலில் ஒரு சர்ச்சையொன்று மையங்கொண்டுள்ளது. சர்ச்சையின் மையப்புள்ளி லீனா மணிமேகலை. சமீபத்தில் அவருடைய கவிதை நூல் (சிச்சிலி) […]

விடியோ: சிவப்புச் சந்தை நூல் அறிமுகம்

“மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது சிவப்புச் சந்தை (The Red Market)” அடையாளம் பதிப்பக வெளியீடு. நூல் அறிமுகம்: கார்த்திக் கோபாலகிருஷ்ணன்

வலியும் காயமுமாய் மெய்யின் சிலிர்ப்போடு ச. பாலமுருகனின் பெருங்காற்று

ஒடியன் லட்சுமணன் வலியில்லாத, அலைக்கழிக்காத எதையும் என்னால் எழுதமுடியாது என்ற பிடிவாதத்தோடு தொடர்ந்து களத்தில் இயங்கும் ச. பாலமுருகன், சோளகர் தொட்டிக்குப்பிறகு நீண்ட இடைவெளியெடுத்து எந்தவித ஆர்பாட்டமுமில்லாமல் பெருங்காற்றை சமீபத்தில் கொண்டு வந்திருக்கிறார். யாரும் அதிகம் தொடாத, போராட்டங்களோடு தான் பங்கெடுத்த களங்களை பின்புலமாக வைத்து […]

இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவல் திரைப்படமாகிறது!

எழுத்தாளர் இரா. முருகவேளின் ‘மிளிர்கல்’ நாவல் திரைப்படமாகிறது. இந்தப் படத்தை மீரா கதிரவன் இயக்குகிறார். இதுகுறித்து தனது முகநூலில் இரா. முருகவேள் செய்துள்ள அறிவிப்பு: “தோழர் திருப்பூர் குணா சொன்னது உண்மையாகிவிட்டது. அவள் பெயர் தமிழரசி இயக்குநர் மீரா கதிரவன் மிளிர் கல் நாவலைத் திரைப்படமாக எடுக்க […]

“பிடித்தெழ முயல்கிறேன். எழுந்துவிடுவேன்” நீதிமன்ற தீர்ப்பு குறித்து பெருமாள் முருகன் அறிக்கை

மாதொருபாகன் நூலுக்குத் தடை விதிக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதுகுறித்து பெருமாள் முருகன் அறிக்கை : “நண்பர்களே, வணக்கம். தீர்ப்பு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. உள்ளொடுங்கிப் புகைந்த மனத்திற்குப் பெரும் ஆறுதலாக இருக்கிறது. ‘எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்’ என்னும் இறுதி வாசகத்தின் […]

பெருமாள் முருகனின் மாதொருபாகன் வழக்கு;கருத்துரிமைக்காகக் கரம் உயர்த்துவோருக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு!

அ. குமரேசன் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுவோருக்கு ஒரு முக்கிய வெற்றியாக, எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்குத் தடை விதிக்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூலை 5) அளித்துள்ள தீர்ப்பைப் பார்க்கிறேன், வரவேற்கிறேன். எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ […]

தமிழ் இருக்கையில் எதைக் கட்டமைக்க நினைக்கிறீர்கள்?: கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் சமீபத்தில், ‘அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை துவங்கவேண்டும் அதற்கு ஆதரவும் நிதியும் தாருங்கள்..’ என்ற குரல்கள் தமிழ்நாட்டில் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நமது 2000 ஆண்டுகால மொழியின் பெருமை உலகஅரங்குகளில் ஒலிக்கவேண்டுமானால் அந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைந்தால்தான் நடக்கும் […]

ஞாயிறு கலை-இலக்கிய நிகழ்வுகள்: கவிஞர் குமரகுருபரன் நினைவஞ்சலி மற்றும் சில…

கவிஞர் குமரகுருபரன் நினைவலைகள் கூட்டம்: ஞாயிறு (26-06-2016) காலை பத்துமணிக்கு சென்னை கவிக்கோ மன்றத்தில் இயல்விருது பெற்ற மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவலைகள் கூட்டத்திற்கு உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தாளர் வெளி. ரங்கராஜனின் சமகால இலக்கிய உரையாடல்கள் குறித்த கலந்துரையாடல்:  எழுத்தாளர் வெளி. ரங்கராஜனின்அண்மைக்கால […]

“மிகையுணர்ச்சியில் திளைக்கும் குமர குருபரனின் மரணம்”: லக்‌ஷ்மி மணிவண்ணனின் சர்ச்சை பதிவு

Kumar

இயல் விருது பெற்ற குமரகுருபரனின் மரணத்தை மிகையுணர்ச்சியில் காட்டுவதாக லக்‌ஷ்மி மணிவண்ணன் எழுதிய முகநூல் பதிவு சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. லக்‌ஷ்மி மணிவண்ணன் எழுதியது: குமர குருபரனை நான் ஒரு கவிஞராகக் கருதவில்லை.அதற்கு அவர் கவிதைகள் இடம் தருபவையும் அல்ல.இதனை அவரிடமும் தெரிவித்திருக்கிறேன். அவரைப் பற்றிய பிற நண்பர்களின் […]

இந்த மரணம், நனவாகியிருக்கக்கூடாத கனவு: பொன். வாசுதேவன்

பொன். வாசுதேவன்  எதையெதையோ எழுத நினைக்கிறது மனம். குறிப்பாக எனக்குள் அதிகம் உணர்வுக்குலையலை ஏற்படுத்திய மரணங்கள் குறித்து. மிக அதிகமில்லை வெகு சிலரது மரணம்தான். என்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த தினம். மாலை செய்தித்தாளில்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும். செய்தித்தாள் மதுராந்தகம் […]

ஒரு கவிஞன் இப்படி அகாலமாக சாவதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை: ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ் கவிதாவின் வழியாகத்தான் எனக்கு குமரகுருபரன் என்கிற பெயர் அறிமுகம். அவரது கவிதைகளை முகநூலில் பார்ப்பதன் வழியாக உருவானதே அவர்மீதான பிம்பமும். சில முறை கமென்ட்டில் உரையாடியிருக்கிறோம். இன்பாக்ஸில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சடங்குக்குப் பிறகு சிலமுறை அரசியல், இலக்கியம் என்று […]

மீன்கள் இறந்த பின்னும் ஏன் உம்மென்று இருக்கின்றன?: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன் ’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற தலைப்பை நான் தான் குமரனின் புத்தகத்திற்கு வைத்தேன், அது ஒரு துரதிஷ்டம் பிடித்த தலைப்பு என்று அப்போது எங்கள் இருவருக்குமே தெரியவில்லை குமரனின் சாவு ஒரு கருநாகம் போல நெஞ்சில் படுத்திருக்கிறது. அவனது உடலை […]

“குமரகுருபரன் ஒவ்வொரு நாளும் சின்னச்சின்னத் தற்கொலைகளையே செய்துகொண்டிருந்தார் என்று படுகிறது”: ஜெயமோகன்

  ஜெயமோகன் இப்போது பாரீஸில் இருக்கிறேன். காலை ஆறுமணிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் கவிஞர் கதிர்பாரதி பேசினார். குமரகுருபரன் மறைந்தார் என்று அவர் சொன்னபோது நெடுநேரம் யார் என்றே புரியவில்லை. மறையக்கூடியவர்கள் என்று சிலரை நம் மனம் கணக்கிட்டிருப்பதில்லை. புரிந்ததும் இறப்புச்செய்திகள் அளிக்கும் வெறுமை, […]

‘காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்த தெல்லாம் காண்பமன்றோ’: கவிஞர் குமரகுருபரன் அஞ்சலி

கவிஞர் குமரகுருபரன் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருடைய அகால மரணத்துக்கு இலக்கியவாதிகள், வாசகர்கள், அன்பர்கள் செலுத்திய அஞ்சலிகள் இங்கே… ஞாநி சங்கரன் குமரகுருபரன் இறந்த தகவல் சற்று முன் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 1999ல் என்னுடன் விண் நாயகன் இதழில் பணியாற்றியபோதே அவருடைய […]

இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் அகால மரணம்

Kumar

இயல் விருது பெற்ற கவிஞர் குமரகுருபரன் இன்று அதிகாலை மாரடைப்பால் அகால மரணமடைந்தார். கவிஞரின் இறுதிச் சடங்கு திருநெல்வேலியில் நடக்கிறது.

சமகால அரசியலை இலக்கியமாக்குதல் : ஆதவன் தீட்சண்யாவின் 3 நூல்கள் குறித்து கருத்துரை கலந்துரையாடல்

ஆதவன் தீட்சண்யாவின் 3 நூல்கள் குறித்து கருத்துரை கலந்துரையாடல் சனிக்கிழமை 18 ஜூன் 2016 மாலை 5.30 மணி சென்னையில் நடைபெறுகிறது. சமகால அரசியலை இலக்கியமாக்குதல் என்ற தலைப்பில் வ. கீதா சிறப்புரை ஆற்றுகிறார். 1. நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் – சிறுகதைத் தொகுப்பு கருத்துரை – […]

“எதிர்பார்த்தபோது கிடைக்கவில்லை; எதிர்பாராமல் கிடைத்திருக்கிறது”: லக்‌ஷ்மி சரவணகுமார், குழ. கதிரேசனுக்கு யுவ-பால புரஸ்கார்!

எழுத்தாளர் லக்‌ஷ்மி சரவணகுமாரின் ‘உப்புநாய்கள்’ மிகவும் பேசப்பட்ட நாவல். வெளியான நான்கு ஆண்டுகள் கழித்தும் வாசகர்களால் கொண்டாடப்படும் நாவல். இது வெளியான ஆண்டிலேயே சாகித்ய அகாடமி இளம் படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் ‘யுவபுரஸ்கார்’ விருதைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், எவரும் எதிர்பாராத ‘கானகன்’ நாவலுக்காக […]

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் “இயல் விருது” 2015 அறிவிப்பு…!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் […]

திறமையுடைய ஒரு எழுத்தாளரை விமர்சன நோக்கின்றி மேலோட்டமாகக் கிண்டல் செய்வது சரியா?

விஜய் மகேந்திரன் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் இன்றைய எழுத்து எழுச்சி சாதாரணமான ஒன்றல்ல. அவர் அளவுக்கு இலக்கிய உலகின் புறக்கணிப்பின் அரசியலை ஒருவர் சந்தித்து இருந்ததால் என்றோ இலக்கியமும் வேண்டாம் ! எழுத்தும் வேண்டாம் ! என்று ஓடியிருப்பார்கள். பன்முக அரசியல் தொடங்கி ஊடக […]

சாதிய சனாதன சக்திகளோடு சமரசம் செய்து கொள்ளாத சின்னக்குத்தூசி

பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி பிறந்த நாளை ஒட்டி, அவர் நினைவாக நக்கீரன் கோபால் தொடங்கிய சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின், அச்சு ஊடகம் சார்ந்த சிறந்த கட்டுரையாளர்களுக்கான & வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கு விழா சென்னையில் நடைபெற்றது. வாழ்நாள் சாதனையாளருக்கான் விருதை பதிப்பாளர் வைகறைவாணன் பாராட்டு, […]

தமிழின் நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் பட்டியலும் சர்ச்சைகளும்

‘பட்டியல்’ வெளியாகும் போதெல்லாம் சர்ச்சைகளும் சேர்ந்து கொள்கின்றன. சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஸ்ருதி டிவி தமிழின் நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் யார் என்று எழுத்தாளர்களிடமே கேட்டுள்ளது. அதற்கு பிரபல எழுத்தாளர்களின் பதில்கள் இந்த வீடியோவில்… இந்தப் ‘பட்டியல்’ வீடியோ குறித்து முகநூலில் இலக்கியவாதிகளிடையே விவாதங்கள் […]

பத்தி: படைப்பூக்கம் சார்ந்த அணுகுமுறைகள் இல்லாத பபாசி: புத்தகச் சந்தையின் சரிவு சரிகட்டப்படுமா?

ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கி பதிமூன்றாம் தேதி வரை நடைபெற்ற 39 ஆவது சென்னை புத்தகக் காட்சி முடிவடைந்திருக்கிறது. பொதுமக்களும் வாசகர்களும்தான் இதனை திருவிழாவாக கடந்த காலங்களில் மாற்றி இருக்கிறார்கள். திரண்டு வரும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்துக் கொடுத்து பெரும் கொண்டாட்டமாக மாற்றத் […]

“அந்தரங்கமா வாசிக்கிறதுன்னா புத்தகத்தை ஜட்டிக்குள்ள ஒளிச்சு வச்சு படிக்கணும்னு அர்த்தம்” பவா இலக்கணம் குறித்து ஆதவன் தீட்சண்யா

பவா செல்லதுரை ‘செம்மலர்’ இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில் கவிதைக்கான இலக்கணம் குறித்து சொல்லப்பட்ட கருத்துக்கு இடதுசாரி எழுத்தாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளரும் பேராசிரியருமான அருணனின்  முகநூல் பதிவு இது: பவா வின் கவிதைக்கான இலக்கணம் நியாயமானது அல்ல நாடகக் கலைக்கு பிரளயன் அளித்துள்ள […]

துரை குணாவின் ஊரார் வரைந்த ஓவியம் ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல்: தர்மினி

தர்மினி ‘கலகத்தை முதலில் தன் குடும்பத்திலிருந்தும் தன் உறவு முறைகளிடமிருந்தும் சொந்தச் சாதிக்குள்ளிருந்தும் தான் தொடங்கவேண்டும். எனக்கு அப்படித்தான் தொடக்கம்…’ என எழுதும் துரை. குணா நேற்று அதிகாலை காரணமெதுவும் சொல்லாமல் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நூலை […]

குஷ்பூ நூல் வெளியிடுவதில் என்ன தவறு கண்டுவிட்டீர்கள்: கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் திரைப்பட ஆளுமையும் “வெகுஜன அரசியல் தளத்தில் பாப்புலரான பெண்ணியக் கருத்துக்களை முன்வைத்து ஆணாதிக்கத்தின் மீது எதிர்ப்புக் குரல் எழுப்பி வருபவருமான குஷ்பூ என் நூலை வெளியிட்டது குறித்து “ஒழுக்கியவாதிகள்” மத்தியில் பெரும் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது. என்னிடம் நேரில் “நாங்கள் எப்பொழுதும் […]

#புத்தகம்2016: புத்தகச் சந்தையில் சினிமா தொடர்பான புதிய நூல்கள்!

1. ரசிகை பார்வை பா. ஜீவசுந்தரி கயல் கவின் வெளியீடு தமிழ் சினிமா: காண்பதுவும் காட்டப்படுவதும் அ. ராமசாமி உயிர்மை பதிப்பகம்   3. பேசுவதை நிறுத்திக்கொண்ட சிறுவன் யமுனா ராஜேந்திரன் பிரக்ஞை வெளியீடு 4. போர்த்திரை விஜய் ஆம்ஸ்ட்ராங்க் டிஸ்கவரி புக் பேலஸ் எதிரிணைகளின் சினிமா […]

“பெரியார், அம்பேத்கர், ஜெயகாந்தன், புதுமைப்பித்தனோடு சிரிப்பு நடிகர் வடிவேலு; விகடனின் தடம் யாரைக் கேவலப்படுத்துகிறது?”

வாசு தேவன் இந்த விகடனின் தடம் என்ற இதழ், ஏதோ கலை, இலக்கியத்தை உய்விக்க ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டது என்ற ரீதியில் எழுதி சூடம் கொளுத்தி தங்களின் பக்தியை பறைசாற்றும் பதிவுகளை வாசிக்க முடிந்தது. நானும் இதழை வாங்கி புரட்டிப் பார்த்தேன், பக்கவாட்டில் சாய்த்து, அண்ணாந்து […]