வகை: #புத்தகம்2017

” பார்த்தீனியம் ” நாவல் இலக்கிய உலகில் , தமிழ் ஈழ வரலாற்றில் நிலைபெறும் !

பீட்டர் துரைராஜ் அமுதன் அடிகள் இலக்கிய விருது மார்ச்சு மாதம் தமிழ் நதிக்கு வழங்கப்பட்டுள்ளது. வாசகசாலை இந்நாவலுக்கு திறனாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது. விகடன்.காமிற்காக நியாஸ் அகமது தொகுத்த 2016 ல் கவனம் கொள்ளத் தக்க நூட்கள் பட்டியலில் இதனைப் பரிந்துரைத்திருக்கிறார் பத்திரிக்கையாளர் மாரி செல்வராஜ். […]

”பகுத்தறிவு பேசும் உயிர்மை சுஜாதா என்ற பார்ப்பனர் பெயரில் விருது தரலாமா?”

உயிர்மை இதழ் வருடந்தோறும் வழங்கி வரும் ‘சுஜாதா’ பெயரிலான விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்குப் பின்னால் சர்ச்சைகள் கிளம்புவதுபோல் ‘சுஜாதா விருது’ அறிவிப்பையொட்டி இலக்கியவாதிகள் சில கருத்துகளை முன்வைக்க, அது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. எழுத்தாளர் மாலதி மைத்ரி தன்னுடைய முகநூல் பதிவில்  “சுஜாத்தா பெயரில் பெரும் […]

உலக புத்தக தினத்தில் 30% முதல் 50% வரை சிறப்பு தள்ளுபடியில் நூல்கள்!

உலக புத்தக தினத்தை ஒட்டி 50% வரையிலான சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளன பதிப்பகங்கள். சினிமா தொடர்பான நூல்களை வெளியிடும் பேசாமொழி பதிப்பகம்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 22, 23 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் […]

விளிம்புக்கு அப்பால்: புதிய படைப்பாளிகளின் சிறுகதை சிறப்பிதழ்!

‘அகநாழிகை’ பொன்வாசுதேவன் இலக்கியம் என்பது கோட்பாடுகளிலும், இஸங்களிலும் சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இலக்கியத்தைச் செய்பவர்களின் நிலை இதுதான். கண்ணுக்குத் தெரியாத பொறியில் சிக்கிக்கொண்டு விவாதங்களும், சண்டைகளும், புறங்கூறல்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. எத்தனை எழுத்தாளர்கள் புதிதாக எழுத வருகிறவர்களின் படைப்புகளைப் படிக்கிறார்கள் என்பது தெரியாது. எத்தனை பத்திரிகைகள் புதிய […]

#புத்தகம்2017: பொய்-வேடங்களில் மன்னன்… இப்பொழுது தலைநகர் டெல்லியில்!

மோடியின் பொய் வாக்குறுதிகளை அம்பலப்படுத்தும் ‘பொய்-வேடங்களில் மன்னன் … இப்பொழுது தலைநகர் டெல்லியில் !’ நூலிம் பின்னணியில் உள்ள தகவல்கள் இங்கே… ● தமிழில் வெளிவந்துள்ள “பொய்-வேடங்களில் மன்னன் … இப்பொழுது தலைநகர் டெல்லியில் (பாகம் 1) …..!” நூலின் மூலப்பிரதியின் தலைப்பு “Fekuji […]

நெடுஞ்சாலை வாழ்க்கையும் நான் தீண்டிய இரும்புக் குதிரையும்!

கே.ஏ.பத்மஜா நூல்: நெடுஞ்சாலை வாழ்க்கை | நூலாசிரியர்: கா.பாலமுருகன் | வெளியீடு: விகடன் பிரசுரம் சிறுவயது முதல் பயணத்தில் ஜன்னல் வழியில் பார்க்கக்கூடிய அழகிய உலகத்தை நான் ரசித்ததே இல்லை. வாந்தி வரக்கூடும் என்பதால் வாகனத்தில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை தலையைக் கவிழ்த்தபடியே […]

விவசாயிகள் தற்கொலை ஆவணப்படம், சோவியத் படம் திரையிடல், கருத்துரைகள்

காவிரி விவசாயிகள் தற்கொலைகள் குறித்து பூவுலகின் நண்பர்கள் நடத்தும் கண்டனக் கூட்டம் இறந்தாய் வாழி காவிரி – விவசாயிகள் தற்கொலை -ஆவணப்படத் தொகுப்பு திரையிடல் நாள்-04-02-2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி, BEFI அரங்கம்- 17, அமீர்ஜான் சாலை, சூளைமேடுசென்னை கருத்துரை பாமயன், இயற்கை […]

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ”: தமிழ் ஸ்டுடியோ அருண்

“பெரிய சினிமா இயக்குநர்களே புத்தகம் வாங்காமல் கைவீசிக் கொண்டுதான் போகிறார்கள் ” என்கிறார் ‘தமிழ் ஸ்டுடியோ’ மோ. அருண். புத்தக சந்தையை ஒட்டி, தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில், “காசு வைத்துள்ள பெரிய சினிமா இயக்குநர்கள் பலரும்கூட புத்தகங்கள் வாங்காமல் […]

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” ‘யாவரும்’ ஜீவ கரிகாலன்

“மதிப்பிற்குரியவர்கள் எல்லாம் பதிப்பகம் தொடங்கியதும் அவதூறு கிளப்பினார்கள்” என்கிறார் எழுத்தாளரும் ‘யாவரும்’ பதிப்பக பதிப்பாளர்களில் ஒருவருமான ஜீவ கரிகாலன். புத்தக சந்தையை ஒட்டி தி டைம்ஸ் தமிழ் டாட் காமுக்கு அளித்த வீடியோ பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘யாவரும்’ பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி குறித்தும் […]

நகரத்தார் வாழ்க்கைப் பின்னம்: நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடன் தொடர்ந்து ஈழப் படைப்பிலக்கியங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன். ஈழப் போருக்கும் தமிழின அழித்தொழிப்புக்கும் பிந்திய அவலச் சுவை இலக்கியங்கள். எனினும் தமிழ்ப் படைப்பாக்கத்தின் புதிய எல்லைகளைத் தொட்டுப் பேசுபவை. மேச்சேரி, ‘களரி தொல் கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மன்றம்’ சேலத்தில் நடத்திய […]

#புத்தகம்2017: நான் பேசிவிட்டேன் … என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன்…

அருண் நெடுஞ்செழியன் “நான் பேசிவிட்டேன் …என் ஆன்மாவை காப்பாற்றி விட்டேன் …” கோத்தா செயல்திட்டம் மீதான விமர்சன நூலில், கார்ல் மார்க்சின் இறுதி வரிகள் இவை .. கோத்தா செயல்திட்டம் என்றால் என்ன? இது குறித்து மார்க்ஸ் பேசாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும்?இன்றைய 21 […]

#புத்தகம்2017: கதைச் சொல்லிகளின் கதை!

இனியன் ஒரு தலைமுறை சமூக மாற்றம் அல்லது வளர்ச்சி நிகழுகிற பொழுது அதற்கு நேர் எதிரான முந்தைய தலைமுறையினரின் இழப்புகள் மற்றும் மனோநிலைப் போன்றவற்றை எப்படி அவதானித்திட இயலும். அதிலும் குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சி முதல் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள் வரை நிகழத் துவங்கிய […]

#புத்தகம்2017: பொய் – வேடங்களில் மன்னன்…இப்பொழுது தலைநகர் டெல்லியில்

பிரதமர் மோடியின் பல்வேறு காலகட்ட நிலைப்பாடுகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கும் ’BLUFF – MASTER …NOW IN DELHI’ எனும் ஆங்கில புத்தகம் கடந்த வாரம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதே புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. எழும்பூர் இக்சா அரங்கில் கடந்த 4ஆம் தேதி […]

“புத்தகம் வெளியிடும்போதே ராயல்டியைத் தந்துவிடுவேன்”: எழுத்தாளர் பதிப்பாளர் லக்ஷ்மி சரவணகுமார்

பதிப்பகம் ஆரம்பித்தது தற்செயலானது என்கிறார் இளம் படைப்பாளிக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார். ‘மொக்லி’ என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கியிருக்கும் சரவணகுமார்,  2017 சென்னை புத்தக காட்சியை ஒட்டி நான்கு புத்தகங்களை தன்னுடைய பதிப்பகத்தின் மூலம் கொண்டுவந்திருக்கிறார். லக்ஷ்மி சரவணகுமாருடன் […]

#புத்தகம்2017: அப்புவும் ஆச்சியும் எழுத்தில் இருக்கிறார்கள்

அகரமுதல்வன் ஒரு மனிதனின் வாழ்க்கை கண்விழிக்கும் நேரத்தில் அவனோடு வேட்கை ஒட்டிவிடுகிறது. அவன் தன்னையல்லாத எல்லோரையும் நேசிக்கும் ஒரு மகத்துவத்தை அடைந்து விடுகிறான். அலைக்கழிப்பும் வறுமையும் கனவுகளும் கலக்கங்களும் செருப்பில்லாத அவனின் காலடித்தடங்களை சுவடு எடுத்தபடியே பின்தொடர்கிறது. வாழ்வு ஒரு வேட்டை நாய். நம் […]

#புத்தகம்2017: சயாம் ரயில் பாதையின் ரத்த சாட்சியங்கள்!

எங்கள் எம்டி Ramesh Rmr இல்லையேல் இந்த நூல் சாத்தியமாகி இருக்காது. 2013ம் ஆண்டு கோடையில் ஒருநாள் கைபேசியில் அழைத்தார். அப்போது அவர் தெற்காசிய சுற்றுப் பயணத்தில் இருந்தார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சயாம் – பர்மா இடையில் ரயில் பாதை அமைக்க […]

கவிஞர் குமரகுருபரனின் ‘ஞானம் நுரைக்கும் போத்தல்’ கவிதைத் தொகுப்பு இரண்டாம் பதிப்பு வெளியீடு!

கிருபா முனுசாமி “ஞானம் நுரைக்கும் போத்தல்” கவிதை தொகுப்பின் முதல் பதிப்பு 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிவந்தது. வெளிவந்த மூன்று மாதங்களிலேயே அத்தொகுப்பின் அனைத்து பிரதிகளும் தீர்ந்துவிட்டமையால் கவிஞர் மாமா குமரகுருபரன் அவர்கள் டிஸ்கவரி புக் பேலஸின் “படி வெளியீடு” வாயிலாக கொண்டுவர […]

#புத்தகம்2017: பா. ஜீவசுந்தரியின் ‘குரலற்றவர்களின் குரல்கள்’!

பா. ஜீவசுந்தரி அதிகார வர்க்கம் தமது செயல்பாடுகள், அலட்சியங்களை நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இதனால் சமூகத்தின் ஒரு பிரிவு பாதிக்கப்படும் போது பாதிப்பற்ற சமூகம் அமைதியையே விரும்புகிறது. ஆனால் அதே பிரிவு பாதிப்புக்குள்ளாகும்போது அமைதியைக் குலைத்துக் கொந்தளிக்கிறது. பெண்கள் எப்போதும் இரண்டாம் படிநிலையில் நிறுத்தப்படும் […]

புத்தகங்களுடன் புத்தாண்டுக்கு வரவேற்பு: இன்று நடைபெறவிருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

எழுத்தாளர்களும் பதிப்பகங்களும் புத்தக விற்பனை நிலையங்களும் புத்தாண்டு கொண்ட்டாட்டத்தை கொண்டாட இருக்கின்றன. எங்கே, என்ன நிகழ்வுகள் நடக்கின்றன…இதோ ஒரு தொகுப்பு… மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரன் நினைவு நூல் தொகுப்பு வெளியிடுகிறது ‘புலம்’. இந்நிகழ்வு மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இடம்: கவிக்கோ மன்றம் நாள்: […]

#புத்தகம்2017: செல்லாக் காசின் அரசியல்

எந்த ஒரு முதலாளித்துவ அரசும்,தனது வர்க்கச் சார்பு நடவடிக்கையை பட்டவர்த்தனமாக அறிவித்துக்கொண்டு செயல்படுத்துவதில்லை. அது, முதலாளித்துவ வளர்ச்சியை நாட்டின் வளர்ச்சியாகவும், அதற்கு சேவை செய்வதை நாட்டின் நலன் கருதிய சேவையாகவுமே காட்டும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பகைவர்களைக் கட்டமைத்து தனது சமூக மேலாண்மையை தக்க வைத்துக் […]

இரா ஜவகரின் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா

பத்திரிக்கையாளர் இரா ஜவகரின் ‘மகளிர் தினம்: உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா இன்று  (17.12.2016) மாலை 6 மணி அளவில் உமாபதி அரங்கம்(பழைய ஆனந்த் திரையரங்கம்) இண்ணா சாலையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு […]

வீழ்ந்தவர்களில் பிழைத்தவன் கதையே அஜ்வா!: சரவணன் சந்திரன்

ஒரு விளையாட்டு வீரனை, அவன் காயமற்று இருக்கிற காலத்தில் களத்திற்கு அனுப்பாமல் இருக்கிற நிலை துயரமானது. அந்தத் துயரத்தைப் பல முறை அனுபவித்திருக்கிறேன். எனவே வாய்ப்புக் கிடைக்கிற போது முழுமையாக ஆடிப் பார்க்க நினைக்கிறேன். இப்போது நல்ல உடல் தகுதியோடு இருப்பதாகவும் கருதுகிறேன். எனக்கு […]

#புத்தகம்2017: ஏர் மகாராசனின் ‘மொழியில் நிமிரும் வரலாறு’!

ஆசைத்தம்பி பச்சை கிளி போல பறக்கிறோம் தாலி பறி கொடுத்தேன் கூரை பறி கொடுத்தேன் கணவனைப் பறிகொடுத்துத் தனிவழி நின்றலஞ்சோம் அழுகையொலி நிற்கவில்லை யார் மனசும் சுகமாயில்லை என ச. முருகபூபதியின் கவிதையோடு ஆரம்பித்து பொறுமைக்கு அர்த்தப்படுத்தப்பட்ட பெண்ணும் நிலமும் பருந்துகளால் சூறையாடப் படும் பொழுது […]

சென்னை மெல்ல மெல்ல கடலுக்குள் கரைந்துக் கொண்டிருக்கிறது: விநாயக முருகன்

விநாயக முருகன் ஒருகாலத்தில் சென்னையை சுற்றி ஆயிரக்கணக்கான ஏரிகள் இருந்தன. செங்கல்பட்டை (அப்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் ஒன்றாக இருந்தன) லேக் மாவட்டம் என்றே சொல்வார்கள். பொன்னியின் செல்வன் நாவலில் வீராணம் ஏரியை சுற்றி அறுபத்துநான்கு மதகுகள் இருந்தன என்ற தகவல் வரும். […]

#நிகழ்வுகள்: ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா

2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் வழங்கும் விழா சென்னையில் இன்று மாலை நடைபெற உள்ளது. இது தொடர்பாக மணப்பாறை செந்தமிழ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கான நூல்களை மணப் பாறையிலிருந்து இயங்கி வரும் செந்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. […]

அட்டைப் பட சர்ச்சையுடன் 2017 புத்தக திருவிழா துவங்கியது!

ஜனவரியில் நடக்கவிருக்கும் புத்தக திருவிழாவுக்காக புத்தகங்கள் வேகமாக தயாராகி வருகின்றன. பொதுவாக வெளியிட்டு விழாக்களில் தொடங்கும் இலக்கிய சர்ச்சைகள், இந்த ஆண்டு  புத்தக தயாரிப்பின்போதே தொடங்கியிருக்கின்றன. சர்ச்சையில் மையமாக உயிர்மை பதிப்பகம். உயிர்மை பதிப்பகத்தின் பதிப்பாளரும் கவிஞருமான மனுஷ்யபுத்திரன் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட தகவலே […]

#நிகழ்வுகள்: ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ நூல் வெளியீட்டு விழா

பத்திரிகையாளர் பா.ஏகலைவன் எழுதியுள்ள ‘ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா – நளினி சந்திப்பும்’ நூல் வெளியீட்டு விழா வியாழக்கிழமை சென்னை வடபழனி ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது. நூலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். விழாவில் […]

#புத்தகம்2017: நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதை!

சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கைத் தமிழ்க் கவிஞர் லதாவின் புதிய கவிதைத் தொகுப்பு “யாருக்கும் இல்லாத பாலை” க்ரியா வெளியீடாக வந்துள்ளது. 57 கவிதைகளைக் கொண்ட இத்தொகுப்பு முழுவதும் வார்த்தைகள் காட்சிகளாய் நம் கண்முன் விரிவதை உணரலாம். பகட்டற்ற, சாதாரண வார்த்தைகளைக் கொண்டு, எளிமை நிறைந்த […]