வகை: பெண்கள்

மாதவிடாயின் முதல் நாளில் விடுமுறை: மாத்ருபூமி பெண்களுக்கு சலுகை

கேரளாவில் இயங்கிவரும் பிரபல தொலைக்காட்சி  ஊடக நிறுவனமான மாத்ருபூமியில் 75 பெண்கள் பணிபுரிகின்றனர். மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் தங்கள் நிறுவனத்தின் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு அறிவித்துள்ளது மாத்ருபூவி. இதுகுறித்து அதன் இணை இயக்குநர் எம்.வி. ஷ்ரேயாம்ஸ் குமார் அளித்த பேட்டியில், ‘நம் நாட்டில் […]

பெண்கள் முகத்தை மூடுவதுதான் ஹரியாணாவின் பாரம்பரியமா?

பெண்கள் தங்கள் முகத்தை முக்காடிட்டு மூடிக்கொள்கிற பெருமை ஹரியானாவின் அடையாளம்.”

-இது அங்கே யாரோ ஒரு மடாதிபதியின் உபதேசமோ பேட்டியோ அல்ல. மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிற ‘ஹரியானா சம்வாத்’ என்ற பத்திரிகையில் வந்துள்ள படக்குறிப்பு.

மாதவிடாய் வலி நிறைந்ததாக இருக்க வேண்டியதில்லை!

மாதவிடாய் வலியை இயல்பாக்குவதும் கூட பெண்களையும், அவர்கள் பிரச்சனைகளையும் வழக்கமான பாலியல் கண்ணோட்டத்தின் காரணமாக புறக்கணிப்பதே ஆகும்.

பாலியல் வன்கொடுமையால் ஆணுறுப்பு துண்டிக்கப்பட்ட சாமியாரின் பாஜக தொடர்பு

கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கொள்ளச்சேரியைச் சேர்ந்தவர் ஹரிசாமி. 54 வயதான இவர் ‘புல்லட் சாமி’ என அந்தப் பகுதியில் பிரபலமானவர். தன் பெயரை கங்கேசானந்த தீர்த்தப்பதா என்று மாற்றிக்கொண்டு கேரளாவில் மதிப்பிற்குரியதாக கருத்தப்படும் ‘பன்மன ஆஸ்ரம’த்துடன் இணைந்து செயல்படுவதாக காட்டிகொண்டு வந்திருக்கிறார். ஹிந்து […]

நிர்பயாவுக்கு கிடைத்த நீதி நந்தினிக்கும் கிடைக்குமா?

சந்திரமோகன் நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதிசெய்துள்ளது. தலைநகர் தில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி […]

குழந்தைகள் மீதான வன்முறைக்குக் காரணமான உளவியல் என்ன? தீர்வு என்ன?

தமிழகத்தில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் மீது நிழத்தப்பட்ட மோசமான வன்கொடுமைகள் சமூகத்தின் பேசுபொருளாகியுள்ளன. தாம்பரம் ஹாசினி பாலியன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 3 வயது குழந்தை நகைகளுக்காக கொல்லப்பட்டு குப்பையில் தூக்கிவீசப்பட்டிருக்கிறார். கொடூரமாக கொல்லப்பட்டதற்கான தடயங்கள் அந்தச் சிறுமியின் உடல் […]

Stripper-களை விட நீங்கள் எந்த வகையில் பொறுப்புள்ளவர் ? ; நயன்தாராவுக்கு சில கேள்விகள்….

அன்புள்ள நயன்தாராவுக்கு… அரைகுறை ஆடையுடன் நடிகைகளின் படங்களை Double Spread-ல் கடை விரித்திருக்கும் புத்தகங்களிலும் (Book Requires it ? ),  thigh-high Slit- கவுன் அணிந்திருக்கும் நடிகைகளின் படங்களை upload-டியிருக்கும் இணையதளங்களிலும் நேற்றில் இருந்து Nayanthara Lashes Out, Lashes Out, என்று […]

#நிகழ்வுகள்: மனிதிகளுக்காக ஒரு நடைப் பயணம்!

‘பெண்களை பாதுகாப்போம்! பெண் உரிமையைப் பாதுகாப்போம்’ என்ற முழக்கத்தோடு நடைப் பயணம் ஒன்றை ஒருங்கிணைத்திருக்கிறது மனிதி அமைப்பு. இதுகுறித்து வெளியிட்டப்பட்ட தகவலில், “கடந்த ஓராண்டில் தமிழகத்தில் தொடர்ச்சியாகப் பெண்களின் மீது நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களைப் பார்க்கும் போது, பெண்களை மதிக்கவும், உண்மையாக அன்பு […]

“விவாகரத்தான பெண்கள் கவர்ச்சியானவர்கள்; குறும்பானவர்கள்” ட்விட்டரில் சீண்டியவருக்கு அமலா பாலின் பதில்

நடிகர் அமலா பால் சமீபத்தில் தன்னுடைய திருமண உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார். இது குறித்து ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியாக பேசப்பட்டது. இந்நிலையில், செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் தொடக்கவிழாவில் எடுக்கப்பட்ட அமலாவின் படத்தைப் பகிர்ந்து அதில், “விவாகரத்தான பெண்கள் கவர்ச்சியானவர்கள்; குறும்பானவர்கள் என ட்விட்டியுள்ளார் ஒரு […]

பெண்களை தற்கொலைக்குத் தள்ளும் கட்டமைப்பு வன்முறை குறித்து நாம் என்றாவது பேசியிருக்கிறோமா?: அரவிந்தன் சிவக்குமார்

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் எனும் பொருளில் கடந்த 3-ஆம் தேதியன்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திறந்தவெளிக் கருத்தரங்கு நடைபெற்றது. சுவாதி படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, பொருத்தமாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்ட […]

காதல் புனிதங்களின் மீது நிகழ்த்தப்படும் கொலைகள்: ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ் காதல் என்ற பெயரில் அடுத்தடுத்து பெண்கள் மீதான நான்கு வன்முறைகள். அதில் இரண்டு அப்பட்டமான கொலைகளாக முடிந்திருக்கிறது. முதலில் இவற்றை ‘காதல் கொலைகள்’ என்று வகைப்படுத்துவதே தவறு. இதில் காதல் என்பதே கிடையாது. நமது ‘இளைஞர் திரள்’ காதல் என்று […]

ஸ்ருதிஹாசனும், மலர் டீச்சரும் அடிமனதில் ஆழப் பதிந்திருக்கும் பெண் வெறுப்பும்

மோ. அருண் ப்ரேமம் என்றொரு அரத பழசான படத்தை மலையாளத்தில் எடுத்து அது பெரும் வெற்றிப்படமாக அமைந்ததே எதிர்பாராத விபத்து. சில படங்களுக்கு அப்படி நல்ல விபத்துகள் நேர்வதுண்டு. அதனை தற்போது தெலுங்கிலும் மறு உருவாக்கம் செய்திருக்கிறார்கள். மலர் கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்தது கண்டும், […]

“600 ஆய்வுக்கட்டுரைகளையும் 81 நூல்களையும் எழுதியிருக்கும் என்னை பேராசிரியாராகக்கூட ஐஐடி கருதவில்லை”: பேரா. வசந்தா கந்தசாமி

  சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரியில் இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. கணிதத் துறையில் இணைப் பேராசிரியர் பதவிக்கு, டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமி விண்ணப்பித்தார். ஆனால் அவர் தேர்வாகவில்லை. அதே சமயம், பேராசிரியர் தேர்வில் கலந்து கொண்ட அவர், […]

‘அப்பா’: இருக்கக்கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று சமுத்திரக்கனியிடம் இருக்கிறது

நிலா லோகநாதன் அப்பா திரைப்படம் நல்ல திரைப்படமெனவும் அது கபாலி போன்ற வணிக சினிமாவினால் காணாமல் போய்விட்டதெனவும் நிறைய நண்பர்கள் வருத்தமுடன் எழுதியிருந்தார்கள். எனக்கென்னவோ சமுத்திரக்கனிக்கு இருக்கக் கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று இருப்பதைப் போலப்படுகிறது. நாடோடிகள் மாதிரியான “மெச்சத்தக்க”படத்தை எடுத்தவரல்லவா? அப்பா திரைப்படம் தொடங்கும் […]

“ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம்”: ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா  ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம். அவள் ஒரு ஆணுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்வதோ தேவையில்லை என முடிவு செய்வதோ அவள் சுய விருப்பம். அவள் வாழ்வை முடிவு செய்ய சமுகம் என்றழைக்கப்படும் உங்களுக்கோ, […]

பத்தி: “புலனாகா அரங்கில் பெண் எழுப்பும் கேள்வி”- கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன் தமிழ்மண்ணின் தனிச்சிறப்பு மிக்க கதைப்பாடல்களில் ஒன்றான அண்ணமார் கூத்து நிகழ்ச்சியை சமீபத்தில் பார்க்க வாய்த்தது. தமிழகத்தின் மேற்குப்பகுதியான கொங்குமண்டலத்தின் செழுமையான மரபில் காலூன்றி நடக்கும் கதைப்போக்கும், குருட்சேத்திர யுத்தத்தை நினைவுபடுத்தும் படுகளக் காட்சிகளும் மிக அழகான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள பாங்கில் இந்த […]

வீடியோ: பெண்களின் சுமை ஏறிக்கொண்டே தான் இருக்கிறது! எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி நேர்காணல்

எழுத்தாளர் பா. ஜீவசுந்தரி, பெண்களையும் பெண்களின் பிரச்சினைகளையும் தன் எழுத்தில் ஆவணப்படுத்தி வருவதில் முன்னோடியாக இருப்பவர். மூவலூர் இராமாமிர்தம் வாழ்வும் பணியும் (புலம் வெளியீடு) என்ற நூல் மிக முக்கியமான ஆவணம். சமீபத்தில் மூவலூர் இராமாமிர்தம் எழுதிய ‘இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும்’ (கருப்புப் பிரதிகள் […]

#கபாலி முதன்முறையாக ரஜினி பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார்: மனநல மருத்துவர் ஷாலினியின் பாராட்டு

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கபாலி’ குறித்து பாராட்டுகளும் சர்ச்சைகளும் விவாதங்களும் எதிர்ப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. மனநல மருத்துவர் ஷாலினி ஒரு  மாற்றுப்பார்வையில் ‘கபாலி’யைப் பார்த்திருக்கிறார். “முதன்முறையாக ரஜினிகாந்த், பெண்களை தாழ்த்தி பேசாமல் நடித்திருக்கிறார். அவருடைய மகள் சுயசார்புள்ள பெண்ணாக இருக்கிறார். […]

அறிவுலகைச் சேர்ந்தவர்களுக்கு ஏன் இவ்வளவு பெண் வெறுப்பு?

Divya Bharathi ஓலா கார் ஓட்டுனருக்கும் , தோழர் விலாசினிக்கும் இடையிலான பிரச்சனை ஒரு புறம் இருக்க, அதை ஆயுதமாக்கி பெண்களுக்கு எதிராய் தரம் தாழ்ந்த முறையில் “விமலாதித்த மாமல்லன்” போன்றோர் செய்து வரும், எழுதிவரும், கூறுகெட்டதனங்களை பார்க்கும் போது, பெண் வெறுப்பு என்பது […]

அழகு-அழகின்மை என்ற புனைவு நிலை: ப்ரேம்

பிரேம்  இறுதியாய் எஞ்சக்கூடிய வன்முறை வர்க்கம், சாதி, இனம், பாலினம், சமூக அதிகாரம் என்ற அனைத்து வகை அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு, ஒதுக்குதல்களும் கடந்து இரண்டு மனிதர்களுக்கிடையிலான ஆகக்கொடிய வன்முறையாக அமைவது அழகு-அழகின்மை என்ற புனைவு வழி கட்டப்பட்ட வன்முறைதான். இனவெறுப்பு-புனித வாதம்- தேர்ந்தெடுத்த உடல் […]

டிஜிட்டல் பர்தா – இது கலாச்சாரத்துக்கான காவல், பெண்களுக்கோ இன்னுமொரு அச்சுறுத்தல்

வில்லவன் இராமதாஸ் சேலம் வினுப்பிரியா மற்றும் சுவாதி வழக்குகளுக்குப் பிறகு கலாச்சாரக் காவலர்கள் தங்கள் பெண்கள் மீதான அக்கறையை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். சமூக வலைதலத்தின் பக்கம் வராதீர்கள், வந்தாலும் படங்களைப் பகிராதீர்கள் எனும் ஆலோசனைகள் போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து வருகிறது. இதே ஆலோசனையை ஒரு உள்ளூர் […]

பெண் உடல் பெண்ணுக்கானதல்ல : கௌதம சித்தார்த்தன்

கௌதம சித்தார்த்தன்   கடந்த வருடத்தில் இணையத்தில் வெளியான சர்வதேச மாடலிங் பெண்மணியான கிம் கார்டேஷியன் நிர்வாண மாடலிங் படங்கள் இணையத்தில் வெளியாகி இணையப் போக்குவரத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. paper macஎன்னும் பத்திரிகைக்கு கொடுத்த அந்த மாடல் படம், சமூக பிரக்ஞை கொண்ட விமர்சகர்களாலும், […]

“கழுத்தை அறுக்கறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது” பெண் பதிப்பாளரை மிரட்டிய ஓலா கார் ஓட்டுநர்

தனியார் கேப் நிறுவனங்கள் குறித்து நாடு முழுக்கவும் அவ்வவ்போது புகார்கள் வந்தவண்ணம் இருக்கின்றன. குறிப்பாக ஓட்டுநர்கள், பெண் பயணிகளை நடத்தும் விதம், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, சீண்டுவது, மிரட்டுவது என தொடர்ந்து ஊடகங்களில் செய்திகள் வந்தபடி இருக்கின்றன. இதற்கொரு உதாரணமாகியிருக்கிறது, பிரக்ஞை என்ற பெயரில் […]

“என்ன நடந்ததுன்னு கேட்காமலேயே போலீஸ்காரர் அடிக்கிறாரு; பார்த்த மக்கள் யாரும் என்னன்னு கேட்கலை” கதறிய கர்ப்பிணிப் பெண்

Nallu R Lingam அப்பாவிகளிடம் வீரம் காட்டும் இவர்கள் மனிதர்களா? காக்கி உடை அணிந்தவுடன் மனிதாபிமானம் மரித்துவிடுமா? மு.கு.: இந்த செய்தி ‘தி இந்து’ இணையத்தில் வெளியாகி இருந்தது. செய்தியை வாசித்து பகிர முயன்றால், அதற்குள் பதிவை நீக்கிவிட்டார்கள். யார் தந்த அழுத்தம்? இந்தக் […]

“காதல் பற்றிய மிகையான, கற்பனையான, தவறான கற்பிதங்கள்  வன்மக்கொலைகளுக்கு இட்டுச்செல்கின்றன”

அ. குமரேசன் ஒரு பெண் கொல்லப்பட்டதை அவர் ஒரு பிராமணர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே போல், ஒரு ஆண் கொலை செய்ததை, அவர் ஒரு ஒதுக்கப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக ஒரு சதவீதம் கூட நியாயப்படுத்துவதற்கில்லை. அதே வேளையில், இப்படிப்பட்ட குற்றச் […]

விநோதினி வழக்கில் ம‌ரண தண்டனை அளிக்க கூடிய அளவுக்கு பெரிய குற்றம் நிகழ்ந்திருக்கிறது: நீதிமன்றம்

காதலை ஏற்க மறுத்ததால், கடந்த 2012 நவம்பர் மாதம் 14-ம் தேதி அமில வீச்சுக்கு ஆளானார் புதுச்சேரியைச் சேர்ந்த வினோதினி. மருத்துவமனையில் 2013-ம் ‌ஆண்டு பிப்ரவரி 12-ம் தேதி அவர் மரணமடைந்தார். விநோதினி மீது அமிலம் வீசிய சுரேஷூக்கு காரைக்கால் நீதிமன்றம் ஆயுள் தண்டனை […]

கருத்து: பெண்ணுடலை வெட்டுகிறோமா? பெண்ணை வெட்டுகிறோமா? நாச்சியாள் சுகந்தி

நாச்சியாள் சுகந்தி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலையில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்படுகிறார். அதற்கு அடுத்தநாளே வினுப்பிரியா என்கிற பெண் சேலத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொள்கிறார். காரணம் அவருடைய முகநூலில், வாட்ஸப்பில் இருந்த புகைப்படங்களை மார்ஃபிங் மூலம் போர்னோ படமாக உருவாக்கி, அதை உலவவிடுகிறார்கள். சொந்தக்காரர் […]

“என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம்”

“மொதல்ல நீங்க எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க, என்னோட லைஃப் போனதுக்கு அப்புறம் நான் வாழ்ந்து என்ன பண்ணப் போறேன். எனக்கு வாழப் புடிக்கல்ல, என்னோட அப்பா அம்மாவே என்னை நம்பாதப்போ நான் உயிரோட இருந்து என்ன பிரயோஜனம், அவங்களே என்னைப் பற்றி கேவலமா பேசுறாங்க, […]

ஒரு கொலை ஏன் நடக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணை ஏன் கொல்கிறான்?

Rajasangeethan John   ஆண் தவறு செய்திருக்கலாம். பெண் தவறு செய்திருக்கலாம். கூலி வேலையாக இருக்கலாம். பெற்றோராக இருக்கலாம். ஆனால் எங்கோ ஏதோ ஒரு சிக்கல் நேர்ந்திருக்கிறது. ஏதோ இருவரின் வாழ்க்கை பாட்டங்களுக்கு தடை விழுந்திருக்கிறது. அந்த தடைக்கு அடுத்தவர் காரணம் என்ற புள்ளியில் […]

பத்தி:ஆண் வளர்ப்பில் மாற்றம் வேண்டும்… இல்லையேல், பெண் கையில் ஆயுதம் தாரீர்!

அமுதா சுரேஷ் தினந்தோறும் செய்திகளை வாசிக்கும்போது, பெண்ணுக்கெதிரான ஏதோ ஒரு வன்முறை நிகழ்வை படிக்க நேர்கிறது! அரிதாகப் பெண்கள் நிகழ்த்தும் கொலைகளை விட, ஆண்கள் நிகழ்த்தும் கொலைகளை பார்க்கும்போது ஆண் இனம் மனதளவில் மிருக குணத்தை இன்னும் தாண்டி வரவில்லை என்றே தோன்றுகிறது! “நீ அம்பளைடா, […]

ஸ்வாதியை படுகொலை செய்த ‘அந்த’ ஆண் யார்? ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன?

விடியலை நோக்கிய காலை வேளை ஸ்வாதிக்கு அஸ்தனமாக இருக்கும் என ஸ்வாதிக்கும் தெரியாது, அவரை ரயில் நிலையம் வரை விட்டுவிட்டுச் சென்ற அவருடைய தந்தைக்கும் தெரியாது. ஆனால், அந்த அஸ்தமனத்தை எதிர் நோக்கியிருந்தது, ஸ்வாதியை இரக்கமின்றி வெட்டித்தள்ளிய ‘அந்த’ ஆண் தான். ஸ்வாதியின் சமூக […]

பத்தி: பூவரசி எனும் இறைவியின் வாழ்க்கையைப் படமாக்க தைரியமிருக்கிறதா?

ஜி. கார்ல் மார்க்ஸ் கீழே இருப்பது தினத்தந்தி செய்தி. இதை அப்படியே படமாக எடுப்பதற்கு யாருக்காவது தைரியம் இருக்கிறதா? நமது நிஜ வாழ்க்கை எவ்வளவு ராவாக இருக்கிறது பாருங்கள். தன்னைக் காதலித்தவளை ‘வேறொருவனைக் கல்யாணம் செய்துகொள்’ என்று அறிவுரை சொல்லும் ஒருவன். அவன் மீதுள்ள […]

#இறைவி: இது பெண்ணிய படமில்லாமல் வேறு எது பெண்ணிய படம்: விஜய் பாஸ்கர்விஜய்

விஜய்பாஸ்கர் விஜய் இறைவியில் இதை கவனித்தீர்களா ? -1 அதில் ஒரு தயாரிப்பாளர் டைரக்டரை மன்னிப்பு கேட்கச் சொல்வார். டைரக்டர் மன்னிப்புக் கேட்டதும் காலை நீட்டி கேட்கச் சொல்வார். பின்னர் வருந்தி விளக்கம் கொடுக்கும் போது “சார் அவன் மன்னிப்பு கேட்டா போதும்ன்னுதான் நினைச்சேன். […]

இறைவி….: ப்ரியா தம்பி

Priya Thambi கொஞ்ச நாட்களுக்கு முன்னால் உதவி இயக்குனர் நண்பர் ஒருவர் தன் கதையை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நாகர்கோயிலில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாக சொன்னார். ஆணவக் கொலைக்கு எதிரான படம் என ஆவேசமாக வேறு கூறினார். அருந்ததியப் பெண்ணுக்கும், நாடார் பையனுக்கும் நடக்கும் […]

‘நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்’:சிமாமந்தா எங்கோசி அடிச்சி

சிமாமந்தா எங்கோசி அடிச்சி தமிழில் – பிரேம் “பெண்ணியம் என்று தனியாக ஏன் சொல்ல வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள். “மனிதவுரிமைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அல்லது இது போன்ற வேறு பெயர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?” ஏனென்றால் அது அவமதிப்பான பெயர் மாற்றம். பெண்ணியம் […]

#‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு…!

Vinitha P M Swamy #‎இறைவி‬ ஆண் எழுதி, ஆண் இயக்கி, ஆண்கள் நடித்து, ஆண்கள் பார்வையில் பெண்களைப் பற்றி ஒரு ‘புதிய’ படைப்பு… இதில் என்ன புதுமை?! ஏவாள் காலம் தொட்டு இது தானே நடக்கின்றது? சரி, இந்தப் படைப்பு சொல்ல வரும் […]

கேரள அமைச்சரவையில் முதன்முறையாக இரண்டு பெண்கள்!

கேரளத்தில் ஆட்சியமைத்திருக்கும் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அமைச்சரவையில் இரண்டு பெண் அமைச்சர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கேரளத்தின் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு ஆகும். கேரள அரசியல் வரலாற்றில் அனைத்து அரசாங்கங்களிலுமே ஒரே ஒருபெண் அமைச்சர் மட்டுமே இடம்பெற்றுள்ள நிலையே இருந்தது. இதை […]

இறைவி சர்ச்சை: “என்னைத் தெரியல இந்தக் கருமத்தைக்கு”: நிகழ்ச்சி தொகுப்பாளினியை  மேடையில் சாடிய ராதாரவி

இறைவி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நிஷா, ராதாரவியின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டதால் ஆத்திரமடைந்த ராதாரவி, அவரை மேடையிலே அநாகரிகமான முறையில், “ராதாரவியைப் பத்தித் தெரியல, இந்தக் கருமத்தை கூட்டியாந்து நிகழ்ச்சி நடத்துறீங்க” என பேசினார். […]

அமைச்சரவையில் பெண்களுக்கான இடம்: பெண்கள் ஏன் இரண்டாம்பட்சமாகவே நடத்தப்படுகிறார்கள்?

சுகந்தி நாச்சியாள்  முப்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து ஆளுங்கட்சியாக இருந்த கட்சியே ஆளும்கட்சியாக மீணும் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொண்டே, பெண்களின் தலையில் குட்டு வைக்கிறார்கள். தமிழக அமைச்சரவைப் பட்டியலை அறிவித்துவிட்டார்கள். மிகவும் சந்தோஷப்படக் கூடிய விஷயமாக மூன்று பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டு இருக்கிறது. […]

“உங்கள் மகள் முடிய வெட்டிக்குவா போல? இப்படி எல்லாம் இங்க வர முடியாது. பொண்ணுன்னா நீண்ட கூந்தல் வளர்க்கணும்”: சென்னை பள்ளியில் கட்டுப்பாடு!

நலங்கிள்ளி நான் என் மகள் ஈரோடையை 7ஆம் வகுப்பில் சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் சேர்க்க முடிவெடுத்தேன். சேர்க்கைப் படிவம் நிரப்பும் சடங்குகளை முடித்த பிறகு என் மகளின் ஒளிப்படத்தைக் கொடுத்தேன். அப்போது அதைப் பெற்றுக் கொண்ட ஆசிரியர் என்ன? உங்கள் மகள் முடிய […]