வகை: வேளாண்மை

மேக்கே தாட்டு அணை கட்டுவதற்கு ஒப்புதல்: ஒட்டுமொத்த காவிரிச்சமவெளியின் உருக்குலைவு

ஆறுக்கும் மக்களுக்குமான உறவை, அணைகளை மேலாண்மை செய்கிற அதிகாரி வர்க்கத்தின் ஒற்றை தீர்மானங்கள் கிழித்துப் போட்டது! தற்போது நீதிமன்றங்கள் அதை செய்து வருகிறது.

Advertisements

குடும்பப் பிரச்னையால் தற்கொலை; வயது முதிர்வால் மரணம்: விவசாயிகள் மரணம் குறித்து தமிழக அரசு

வயது முதிர்வு, நோய் காரணமாகத்தான் விவசாயிகள் மரணமடைந்ததாகவும் வறட்சி காரணமாக யாரும் இறக்கவில்லை என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் 30 விவசாயிகள் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தமிழக அரசின் பிரமாணப் பத்திரம் கூறுவதாக ஊடகங்களில் […]

17 விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம்; மற்றவர்களை கைகழுவி விட்டாரா முதலமைச்சர்?

வறட்சியால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துபோன நிலையில் 17 விவசாயிகளின் குடும்பத்துக்கு மட்டும் நிவாரணம் அறிவித்துள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. இறந்துபோன மற்ற விவசாயிகளின் குடும்பங்களை கைகழுவி விட்டதா தமிழக அரசு என கேள்வி எழுப்பியுள்ளார் சிபிஐயின் மாநில செயலாளர் இரா. […]

வேளாண்மையை அழிக்கக் காத்திருக்கும் கார்ப்பரேட் அமைப்பு முறையை எப்போது மாற்றியமைக்கப் போகிறோம்?

நக்கீரன் மேட்டூர் அணையின் நீர்மட்டம் எவ்வளவு என்று தெரிந்துக் கொள்வதற்காக அன்றாடச் செய்திப் பார்ப்பது காவிரிப்படுகை உழவர்களின் வழக்கம். ஆனால் இன்று உழவர்களின் சாவு எண்ணிக்கையைத் தெரிந்துக்கொள்ளச் செய்தியை பார்க்கும் அவலநிலை. வயல்கள் நீரின்றிக் காய்ந்தாலும், உழுகுடிகளின் கண்கள் நீரால் நிரம்பி வழிகின்றன. ஒரு […]

விவசாயிகளின் துயரத்தை புரிந்துகொள்ள, தீர்வு காண உதவும் ஓர் விவாதம்!

‘விவசாயிகள் துயரத்துக்கு யார் காரணம்?’ என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு ‘காலத்தின் குரல்’ நிகழ்ச்சியில் திங்கள்கிழமை விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள், உடனடியாக அரசு செய்ய வேண்டியது என்ன? என பல முக்கியமான பொருள்களில் விவாதம் […]

விவசாயிகள் மரணம் குறித்து ஒரு ஆறுதல் அறிக்கைகூட முதலமைச்சர் வெளியிடவில்லை: விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகள் மரணம் குறித்து முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆறுதல் தெரிவித்து ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை என‌ அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் 5-ம் தேதி விவசாயிகள் மாநிலம் […]

கண்டுகொள்ளாத தமிழக அரசு; தஞ்சையில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே குழிமாத்தூர் கிராமம் குடியானத் தெருவை சேர்ந்த அரவிந்த். இவர், 13 ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்தார். ஆனால் போதிய அளவில் காவிரியில் நீர் திருந்துவிடப்படாத காரணத்தாலும், மழை பெய்யாததாலும் 10 ஏக்கர் நெற்பயிர்கள் கருகிப்போயின. இதனால்  அரவிந்த் […]

பயிர்கருகி இதுவரை 25 விவசாயிகள் மரணம்: பட்டியல் இதோ…

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமறுத்தாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதாலும் சாகுபடி செய்த பயிர்கள் கருகி அழிந்தன. இதனால் ஏற்பட்ட கடும் சேதத்தால் மனம் உடைந்த விவசாயிகள் தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணம் – என […]

8 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின: மனஉளைச்சலில் விவசாயி மரணம்

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கீழையூரைச் சேர்ந்த விவசாயி ராஜகுமாரன். இவர் 8 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்தார். ஆனால் போதிய மழை இல்லாததாலும் காவிரியில் நீர் வராததாலும் பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. பயிர் சாகுபடிக்காக வாங்கிய கடனை எப்படி கட்டுவது என கலங்கிப் […]

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை காங். குழு பார்வையிடும்: திருநாவுக்கரசர்

டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை காங்கிரஸ் குழுவினர் விரைவில் ஆய்வு செய்ய உள்ளனர் என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர். தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘காவிரி டெல்டா பகுதியில் ஏற்கெனவே குறுவை பொய்த்து போனது, தற்போது சம்பா சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பயிர்கள் […]

நபார்டு வங்கி மூலம் ரூ.21,000 கோடி விவசாயக் கடன்…

விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.21,000 கோடி விவசாயக் கடன் வழங்குவதற்கு நபார்டு வங்கிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய அவர், “தற்போது ரபி பருவச் சாகுபடி நடைபெற்று வருவதால், […]

’3 ஆண்டுகளில் 80 % விவசாய நிலங்கள் அழிந்துபோகும்!’

தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் விவசாய நிலங்களை மனைகளாக பதிவு செய்ய தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் புதுச்சேரி அரசு இரண்டு வாரத்தில் பதிலளிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் விவசாய […]

அடுத்தடுத்து நடக்கும் விவசாயிகள் தற்கொலை; மத்திய குழு ஆய்வு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

அடுத்தடுத்து நடக்கும் விவசாயிகள் தற்கொலைகள் குறித்து மத்திய குழு ஆய்வு செய்ய தமிழக எதிர்க்ட்சித் தலைவரும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சுமார் 40 சதவீத அளவுக்கே பெய்ததைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழை […]

ஈரோடு அருகே மீண்டும் ஒரு விவசாயி தற்கொலை!

ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த கரட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். தண்ணீரின்றி காணப்பட்ட மஞ்சள்பயிரை கண்டு மனமுடைந்த அவர், கடந்த வாரம் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மற்றொரு விவசாயி முத்துசாமியும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அதிகாலையில் தோட்டத்திற்கு சென்ற அவர் கருகிய […]

நாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 2 விவசாயிகள் மரணம்; பயிர் கருகி உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை 9 ஆனது!

  நீரின்றி, மழையின்றி நட்ட பயிர்கள் காய்ந்து கருகியதைக் கண்டு மனம் கருகி, ஒரே நாளில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இருவிவசாயிகள் மாண்டு போன துயரச் சம்பவம் நேர்ந்துள்ளது. தேமங்கலம் அந்தோணிசாமி கீழ்வேளூர் அருகே உள்ளது சங்கமங்கலம். அந்த கிராமத்தின் தெற்குவெளி மாதாகோயில் தெருவைச் […]

உழவுக் கருவி வாங்குவதில் ரூ.38 கோடி ஊழல்: விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

உழவுக் கருவி வாங்குவதில் நடந்த ரூ.38 கோடி ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்த பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்டபசின் கரங்களைப் போன்று நீளும் தமிழக ஆட்சியாளர்களின் ஊழல் உழவுக் கருவிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. […]

பயிர்கள் கருகியதால் மேலும் ஒரு விவசாயி தற்கொலை

கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் தனது தோட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்துள்ளார். பவானிசாகர் அணையில் 28 நாட்களே தண்ணீர் திறந்து விடப்பட்டதால் காளிங்கராயன் கால்வாய் பகுதிக்கு சரிவர தண்ணீர் வரவில்லை. இந்த பாசன பகுதியில் உள்ள இவரது நிலத்தில் சாகுபடி செய்த மஞ்சள் […]

ரூ.1000 – 500 சர்ச்சை: பணமற்ற பொருளாதாரத்தில் தொலைந்துபோன இந்தியாவின் ஆன்மா!

சி.  மதிவாணன் நியூஸ் 18 தமிழ் சானலில் ‘செல்லாத நோட்டு … நெருக்கடி சாமாணியர்களுக்கா? பண முதலைகளுக்கா?“ என்றொரு விவாதம் நிகழ்ந்ததை ‘நேரலையாக‘ வலைமனை மூலம் பார்க்க நேர்ந்தது.  அதில் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு விஷயத்தைப் பற்றி மட்டும் தற்போது […]

இன்னுமொரு விவசாயி இறந்துவிட்டார்; சரி விடுங்கள் நாம் பேச விஷயங்களா இல்லை!

சி. மதிவாணன் நவநீதன் என்றொரு விவசாயி. தனது 70 வயதையும் வயலில் கழித்தவர். நாகை மாவட்டத்தின் கீழகாவலகுடி கிராமத்தைச் சேர்ந்தவர். திங்கள் இரவு இதயச் செயலிழப்பினால் மரணித்தார். அவரது நிலத்தில் அவர் விதைத்திருந்த சம்பா பயிர் காய்ந்துபோனதால் அவர் இதயம் தவியாய் தவித்து பின்னர் […]

பயிர் கருகி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

“நடப்பாண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன நீர் கிடைக்காததால் குறுவை சாகுபடி முற்றிலும் செய்யப்படவில்லை. காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பின் படி தண்ணீர் திறக்காததாலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை கர்நாடகம் திறந்து விடாததாலும் இவ்வாண்டு சம்பா சாகுபடியும் டெல்டா பிரதேசத்தில் முழுமையாக […]

நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் தற்கொலைக் களமாக மாறிக்கொண்டிருக்கிறது: ஸ்டாலின்

“அதிமுக ஆட்சியில் நடக்கும் விவசாயிகள் தற்கொலை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்தடுத்து நிகழ்ந்த தற்கொலை செய்தி கேட்டு ஒரு காலத்தில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழ்ந்த தஞ்சை மண்டலம் இப்படி தற்கொலைக் களமாக மாறக் கூடிய அவலமான நிலை இந்த அதிமுக ஆட்சியில் உருவாகியிருக்கிறது” […]

மேலும் இரு விவசாயிகள் அதிர்ச்சியில் சாவு: உடனடியாக நிவாரணம் வேண்டும்!

மரணமடைந்த விவசாயிகள் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வறட்சி காரணமாக விதைத்த நெல் விளையாததால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் உயிரிழந்ததால் […]

பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி; சந்தேக மரணம் என்கிறது போலீஸ்

திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். விவசாயினான இவர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நேரடி சம்பா சாகுபடியில் ஈடுபட்டிருந்தார். ஆனால் விவசாயத்திற்கு போதுமான அளவில் தண்ணீர் இந்தாண்டு வராமல் இருந்துள்ளது. இதனால் பயிர்கள் கருகி சுமார் 4 ஏக்கர் […]

இரா. முருகவேளின் முகிலினி: நதியின் வழியில் ஒரு சமூகப் பயணம்

த. கண்ணன் நூல்: முகிலினி ஆசிரியர்: இரா.முருகவேள் பதிப்பகம்: பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் நாவல் அனுபவம் என்கிறார்கள். முகிலினி எனக்குப் பல முதல் அனுபவகளை அளித்த ஒரு நாவல். முகிலினியின் புத்தக ஆக்கத்தில் (அறிந்தும் அறியாமலும்) மிகச்சிறு பங்காற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக இருந்தது. […]

ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா? விவசாய மானியம் நிறுத்தப்படுகிறதா?: உலக வர்த்தக அமைப்புடன் என்னதான் ஒப்பந்தம் செய்திருக்கிறது மோடி அரசு?

இந்திய அரசு – உலக வர்த்தக அமைப்புடன் டிசம்பர் 2015-ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்றும், விவசாயிகளுக்கான மானியம் முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். பெரும் […]

கட்ட முடியாத கடன்; தற்கொலைக்கு தள்ளும் வறட்சி;சாப்பாட்டுக்கு வாய்க்கரிசியை நம்பியிருக்கும் குடும்பம்: இந்திய விவசாயியின் நிலை இதுதான்….

“பிள்ளைகளை கவனித்துக்கொள்” என்பதுதான், கனகையா என்ற விவசாயியின்,  தற்கொலைக்கு முன்னான கடைசி வார்த்தையாக இருந்திருக்கிறது. எப்போதாவது தலைகாட்டும் மின்சாரத்திற்காகவும்,  அரிதிலும் அரிதாக வரும் தண்ணீருக்காகவும்,  பாளம் வெடித்த தன்னுடைய இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தில் இரவு தங்குவது என்பது கனகய்யாவுக்கு இயல்பான ஒன்றுதான். ஆனால், […]

டிராக்டர் வாங்கிய விவசாயியை தற்கொலைக்குத் தள்ளிய சோழமண்டலம் ஃபைனான்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகேயுள்ள ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அழகர், விவசாயி. இவர் பெரம்பலூர் தோகைமலையிலுள்ள தனியார் நிதி நிறுவனமான சோழ மண்டலம் ஃபைனான்ஸ் மூலம் ரூ.7 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் திருப்பிச் […]