குறிச்சொல்: செய்திகள் r

யாரிந்த ராம்நாத் கோவிந்த்?

டெல்லியில் இன்று பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா செய்தியாளர்களிடையே  பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த்தை பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த அமித் ஷா. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த்(71),  பாஜகவின் […]

விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பாராளுமன்றத்தை கூட்டுக: பிரதமருக்கு சுதாகர் ரெட்டி கடிதம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் கடந்த 7,8 ஆகிய இரண்டு நாட்கள் கோவையில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான புதுப்பிக்கப் பட்ட ஜீவா இல்லத்தில் மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் பி. பத்மாவதி, கோவை மாவட்ட செயலாளர் […]

செங்கோட்டையன், உதயசந்திரன் கூட்டணியின் அதிரடி அறிவிப்புகள்!

தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்போது பல புதிய அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். ரூ.25 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்களும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு ரூ.5 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும் • அனைத்து […]

கரன்ஸி பாலிடிக்ஸில் நம்பிக்கை இல்லை என்று செங்கோட்டையனிடம் சொன்னேன்: பேரம்பேசியதை ஒப்புக்கொண்ட தமிமுன் அன்சாரி

அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்தபோது ‘கரன்ஸி பாலிடிக்ஸில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை’ என தெரிவித்ததாக மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறினார். சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த போது பூரண மதுவிலக்கு, 14 ஆண்டுகள் சிறை […]

இறைவன் மீது ஆணையாக பணம் வாங்கவில்லை: தமிமுன் அன்சாரி

சரவணன் எம்.எல்.ஏ எங்கள் மீது கூறிய குற்றச்சாட்டை 100 சதவிகிதம் நிராகரிக்கிறோம். சட்ட ரீதியாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம்

கூவத்தூர் எம் எல் ஏக்கள் பேரம்; பரபரக்கும் சமூக ஊடகங்கள்!

ஆட்சிக் கலைப்புக்கு தோதான ஒரு அயிட்டம் இப்பவே மோடி மஸ்தான் கைல சிக்கியிருச்சு.. பார்த்துக்கிட்டேயிருங்க.. வைச்சு செய்யப் போறாரு மோடி

இன்ஃபோஸிஸ் அலுவலக அறையில் நிர்வாணமாக இறந்துகிடந்த ஊழியர்

விழுப்புரம் மாவட்டம் வல்லம் அருகே உள்ள தளவாழப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. வயது 31. மென் பொறியாளரான இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.  இளையராஜா செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி தொழிற்பூங்காவில் உள்ள இன்ஃபோசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் கடந்த ஐந்து வருடமாக மென்பொருள் […]

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கூட்டறிக்கை

மத்திய அரசு பசுவதை தடை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் […]

மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடுவதா?: ஜுன் 1 கண்டன ஆர்ப்பாட்டம்

மாட்டிறைச்சி உணவுக்குத் தடைபோடும் மத்திய அரசின் ஆணையை நடவடிக்கையைக் கண்டித்து ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பசு, காளை, எருமை, ஒட்டகங்களை உணவுக்காகப் பயன்படுத்தக் கூடாது […]

ஏழை விவசாயிகளின் உரிமையை பறிக்கும் செயல்: ஸ்டாலின் கண்டனம்

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்பதற்கு ஒட்டுமொத்தமாக மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு திமுகவின் கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்துள்ளார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.  மத்திய அரசின் அறிவிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ‘மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் […]

மாடு, ஒட்டக இறைச்சிக்கு தடை விதிப்பது பண்பாட்டுக்கு எதிரான ஒடுக்குமுறையே..!

மத்திய சுற்றுச்சூழல் துறை கால்நடை விற்பனைக்குப் பல கெடுபிடிகளை விதித்துப் பிறப்பித்துள்ள அறிவிக்கை தொடர்பாக தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் சனிக்கிழமையன்று (மே 27) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: இந்தித் திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் பண்பாட்டுச் சர்வாதிகார […]

ஜிஎஸ்டி: ஆபாச நூல்களுக்கு வரிவிலக்கு; குழந்தை நூல்களுக்கு 12% வரியா?

குழந்தைகளுக்கான நூல்களுக்கு விதிக்கப்பட்ட  12 சதவீத ஜி.எஸ்.டி வரியை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஜூலை, 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. […]

“பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்: ஸ்டாலின் காட்டம்

சென்னை மெட்ரோ சுரங்க ரயில் பாதையை திறந்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மெட்ரோ ரயில் ஜெயலலிதாவின் கனவு என்று பேசினார். மெட்ரோ ரயில் திட்டம் திமுக தொடங்கியது என்பதும் ஜெயலலிதா அதை எதிர்த்தார் என்பதும் நிதர்சனமாக இருக்கும் நிலையில் மத்திய […]

ஊடகச் சுதந்திரத்தை உச்சநீதிமன்றமே மறுப்பது முறையா?: திருமாவளவன்

நீதிபதி கர்ணன் தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்தும், ஊடகங்கள் அவரது பேட்டிகளையோ அறிக்கைகளையோ […]

அம்பேத்கரின் தத்துப்பிள்ளை நான் ; சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நீதிபதி கர்ணன் ஆவேசம்….

நீதிமன்ற அவமதிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. இந்த நிலையில், சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி கர்ணன், “தன்னுடைய அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று […]

நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடம் வரம்பு மீறிய சோதனை: சிபிஎம் கண்டனம்

நாடு முழுவதும் நேற்றைய தினம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு எழுதும் மையங்களில் கடுமையான கெடுபிடிகளும், அதிகப்படியான சோதனை நடவடிக்கைகளும் இருந்தன. இது மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் கடுமையான அதிர்ச்சியை, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சோதனை […]

நீட் ஏன் தமிழ்நாட்டிற்கு தேவையில்லை? ; ஜெயாவின் இந்தக் கடிதத்தை படியுங்கள்….

மார்ச் 10, 05:15 AM சென்னை, மருத்துவ கல்வியில் தேசிய பொது நுழைவுத்தேர்வை ஆதரிக்கும் மறுசீராய்வு மனுவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என்று பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:– ஏற்கனவே […]

ரூ 300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் – எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் யார்?

ரூ 300 கோடி லஞ்சம் பெற்ற அமைச்சர்கள் – எம்.எல்.ஏக்கள் அதிகாரிகள் யார்? என கேட்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொழில் அதிபர், தமிழ்நாடு அரசின் ஒப்பந்தக்காரர் எனக் கூறப்படும் சேகர் ரெட்டி […]

மாணவியின் பிராவை கழட்ட சொன்ன பெண் அதிகாரிகள்: நீட் தேர்வு அராஜகங்கள்…

கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள குன்னிமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள நீட் தேர்வு மையத்திற்கு சென்ற மாணவி ஒருவரை  சோதனையிட்டதில், அவருடைய பிராவில்  மெட்டல் கொக்கிகள் இருந்ததை மெட்டல் டிடக்ட்டர் சுட்டிக்காட்டியுள்ளது. இதை அடுத்து அந்தப்பெண்ணின் பிராவை கழற்றுமாறு அங்கிருந்த பெண் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். […]

குடும்பப் பிரச்னையால் தற்கொலை; வயது முதிர்வால் மரணம்: விவசாயிகள் மரணம் குறித்து தமிழக அரசு

வயது முதிர்வு, நோய் காரணமாகத்தான் விவசாயிகள் மரணமடைந்ததாகவும் வறட்சி காரணமாக யாரும் இறக்கவில்லை என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் 30 விவசாயிகள் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும் தமிழக அரசின் பிரமாணப் பத்திரம் கூறுவதாக ஊடகங்களில் […]

சுபமுகூர்த்த நாளில்தான் பேசுவோம்: அதிமுக இணைப்பு பற்றி அமைச்சர்

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் […]

காவி உடையில் முருகன்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர் முருகன். கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அவரது சிறை அறையில் இருந்து 2 செல்போன்கள் மற்றும் சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், […]

சன் நியூஸ் ராஜா வழக்கில் பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பிடிவாரன்ட்

சன் செய்தி ஆசிரியர் ராஜா, பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக அந்த பெண்ணைப் பற்றியே அவதூறாக பேசியும் இழிவான தகவல்களை வெளியிட்டு, ராஜா நல்லவர் என்று […]

பெண்களை அறைந்த டிஎஸ்பி பாண்டியராஜனின் பழைய வரலாறு இதுதான்…

திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பணியாற்றிய பல இடங்களில் சர்ச்சைவாதியாகவே இருந்துள்ளார். பக்தர்களை அடித்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முல்லை பெரியாறு அணை பிரச்னை வெடித்ததில் சபரிமலை ஐயப்பன் கோயில் சென்ற தமிழக வாகனங்கள் மீது […]

புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம்: மு.க.ஸ்டாலின்

இந்தியை கொல்லைப் புறமாக திணிக்க நினைத்தால் புதிய இந்தி எதிர்ப்பு போராட்டக் களத்தை காண்போம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பேராபத்து உருவாக்கும் விதத்தில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தமிழகத்தில் உள்ள வேலூர், […]

கிரிக்கெட் வீரர் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியானது; ஆதார் எண் பாதுகாப்பானதுதானா ?

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி, சமீபத்தில் தனக்கு ஆதார் எண் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.  இப்பணியில் ஈடுபட்ட சி.எஸ்.சி. இ -கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனம்,  போட்டோக்களுடன் ட்விட்டரில் வெளியிட்டது. அதில் தோனி தன் கைரேகைகளை பதிவு செய்யும் போட்டோ மட்டுமல்லாமல், […]

பயணச் செலவுகளுக்குக் கூட பணம் இல்லாமல் டெல்லி சென்ற கிருஷின் அப்பா; உடலைக் கொண்டு வர அரசு உதவ வேண்டுகோள்

மர்மமான முறையில் இறந்த  தமிழகத்தைச் சேர்ந்த ஜே.என். யூ பல்கலைக்கழக மாணவர் முத்துகிருஷ்ணன் உடலைக் கொண்டு வர அரசு உதவ வேண்டும் என அவருடைய உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முத்துகிருஷ்ணன் உடலை பார்க்க டெல்லி சென்றிருக்கும் அவருடைய தந்தை ஜீவநாதனின் பயண செலவுகளுக்கு சேலத்தில் […]

இசையிலும் மதம் வந்துவிட்டதா? ; இந்து மதப்பாடலை பாடிய இஸ்லாமிய பெண்ணிற்கு அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு…

கர்நாடகத்தின் ஷிவ்மோகாவில் உள்ள சாகர தாலுகாவை சேர்ந்த 22 வயது சுஹானா சையத், ஜீ டிவியின் நடைபெற்று வரும் நிகழ்ச்சி ஒன்றில், அந்த நிகழ்ச்சியை கண்டு களித்த அத்தனை ரசிகர்களையும், தன்னுடைய அற்புதமான  குரலினால், ஆத்மார்த்தமான உணர்வினால் வசீகரித்தார் என்று கூறினால், அது மிகையில்லை. கன்னடப்படமான […]

குழந்தைகளின் பசி முக்கியமா ? ஆதார் முக்கியமா ?: சத்துணவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கும் மத்திய அரசு…

நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “மதிய சத்துணவு பெற, மாணவ, மாணவியருக்கு ஆதார் எண் கட்டாயம்” என்று அறிவித்துள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீர், மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்கள் தவிர, எஞ்சியுள்ள அனைத்து மாநிலங்களிலும் […]

வங்கி கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் இல்லாவிட்டால் அபராதமா? பொதுத்துறை வங்கியான SBI அறிவிப்பு…

வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பாக ஐந்தாயிரம் ரூபாய் இருக்காவிடில், அபராதம் விதிக்கும் முறையை SBI வங்கி மீண்டும் அறிமுகபடுத்தவுள்ளது. பெருநகரங்களில் உள்ள SBI வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்பாக   5 ஆயிரம் ரூபாயும், பிற இரண்டாம்தர நகரங்களில் வாடிக்கையாளர்கள் 3 ஆயிரம் ரூபாயும், சிறிய நகரங்களில் […]

ஜனநாயக விரோத அரசை அகற்ற அறப்போராட்டத்துக்கு வாருங்கள்: மு.க. ஸ்டாலின்

சட்டப்பேரவையில் திமுகவினர் தாக்கப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில் பங்கேற்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார் அவர். ‘இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். தமிழகத்தை ஆளும் மக்கள் விரோத அரசு அகற்றப்படவேண்டும். இதனை வலியுறுத்தி […]

அவையிலிருந்து திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவு; அமளியால் அவை ஒத்திவைப்பு

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அவையை 1 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர். மீண்டும் அவைக்குத் திரும்பிய அவர், அவைக்கு குந்தகம் விளைவித்ததாகக்கூறி திமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அவைக்காவலர்கள் திமுக உறுப்பினர்களை வெளியேற்ற முற்படும்போது கடும் […]

அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கு சென்று முறையிடுவது? சபாநாயகர் வேதனை

நம்பிக்கை வாக்கெடுப்புக்காக இன்று கூட்டப்பட்ட சட்டப்பேரவை கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அவையை 1 மணி வரை ஒத்திவைத்தார் சபாநாயகர். மீண்டும் அவைக்குத் திரும்பிய அவர், ‘அவையில் எனக்கு நேர்ந்த கொடுமையை எங்கு சென்று முறையிடுவது?’ என வேதனை தெரிவித்தார். ‘அவை சட்டத்திட்டங்களின் படியே […]

திமுக எம்.எல்.ஏக்கள் பூங்கோதை, கு.க. செல்வம் கடும் ரகளை

முதலமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். திமுகவின் 89 எம்.எல்.ஏக்களில் திமுக தலைவர் கருணாநிதியைத் தவிர மற்ற அனைவரும் அவைக்கு வந்தனர். காங்கிரஸின் 8 எம்.எல்.ஏக்களும் முஸ்லிம் லீக் கட்சியின் ஒரு எம்.எல்.ஏவும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமி […]

‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துங்கள்: ஸ்டாலின்

‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயங்காமல் மக்களுக்காக ஆட்சி நடத்துமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத்தியுள்ளார்.  புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் அளித்துள்ள அறிக்கையில், “மக்களின் பொதுநலனைப் பெரிதும் பாதித்திடும் அளவுக்குத் தமிழகத்தில் […]

ஜெயா-சசி குவித்த நகைகள், கைக்கடிகாரங்கள்,கார்களின் மதிப்பு என்ன தெரியுமா ?…

1991-1996 கால கட்டத்தில், ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சர் பதவி வகித்தபோது, அவரும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்கள் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு […]

ஜெ.சமாதியில் சத்தியம்; இதைதான் சொன்னாரா சசிகலா..?

பெங்களூரு கோர்ட்டில் சரணடைவதற்காக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட சசிகலா, மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது  நினைவிடத்தை சுற்றி வந்த சசிகலா,  சமாதி மீது 3 முறை அடித்து சபதம் செய்தார். பின்னர் ஆவேசமாக முணுமுணுத்தார். பின்னர் […]

”தற்போது பொதுத்தேர்தல் தான் தீர்வு!”

ஜெயலலிதா குற்றமற்றவர் அல்ல என்பதையே உச்ச நீதிமன்ற தீர்ப்பு உணர்த்துகிறது எனவே தற்போதைக்கு பொதுத்தேர்தல் தான் ஒரே தீர்வு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தின் “இரு நீதியரசர் இருக்கை” […]

”ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்”

ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் […]

“அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் இளங்கோவடிகள் கூற்று இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது!”

அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் இளங்கோவடிகள் கூற்று இன்றும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ” அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ்ச் […]